Wednesday 29 April 2020

Blindness - சரமகோ

BLINDNESS

(பதிவு 1500 வார்த்தைகள்)
 
ஒரு ஆள் சாலையில் தனது காரில் இருக்கும்போது சிக்னல் மாறும் அந்த நொடியில் திடீரென கண் பார்வையை பறிபோகிறது. அதாவது திடீரென பார்வை பறிபோய்விடுகிறது. அவ்வளவுதான். இது தெரியாமல் எல்லோரும் ஹார்ன் அடித்து அவசரப்படுத்த ஒரு ஆள் உதவிக்கு வந்து ஓரமாக காரை நிறுத்த உதவி செய்கிறான். பார்வை போயிற்று. ஆனால் எல்லாமே பால் வெள்ளையாக இருக்கின்றன. உருவங்கள் கூட தெரிவதில்லை. ஒரு பால் அருவி போல என்று எழுதுகிறார்.  வீட்டிற்கு கூட்ட செல்லப்பட்டு அங்கே தடவி தடவி சென்று சோபாவில் உட்காருகிறார். மனைவி வருகிறார். தனக்கு பார்வை போயிற்று என்பதை நம்ப முடியாமல் மனைவியிடம் சொல்ல ஒரு டாக்டரிடம் செல்கின்றனர். அவர் எல்லாம் சோதித்து விட்டு ஒரு  பிரச்சனையும் இல்லையே என்கிறார். மீண்டும் மீண்டும் கண்ணை கருவி மூலம்  சோதிக்கிறார்.

இதனிடையே சாலையில் உதவி செய்த ஆசாமி இவரை வீட்டில் விட்டுவிட்டு போகும்போது காரை திருடிக்கொண்டு போய் விடுகிறார். இந்த விஷயம் இவர் மனைவி வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிய வருகிறது. மறுபடி கண் மருத்துவ மனையில் பலரும் வரிசையில் காத்திருக்கின்றனர். சிறுவன். பெண். முதியவன் என. அந்த கண் மருத்துவர் புத்தகத்தை படித்து விட்டு படுக்க போகிறார். கண் விழித்து பார்த்தால் அவருக்கும் கண் தெரிவதில்லை. எல்லாம் வெள்ளையாக தெரிகிறது. இதற்குள் இப்படி நிறைய பேருக்கு பார்வை போகிறது என்றும் இது ஒரு கொள்ள நோய் என்றும் சுகாதார நிறுவனம் முடிவு செய்கிறது. மருத்துவ துறை வந்து இவரை வேனில் அழைத்து போகிறது. தன் கணவனுக்கு உதவும் பொருட்டு, தனக்கும் கண் தெரியவில்லை என்று நடித்து அவர் மனைவியும் உடன் செல்கிறார்.  அந்த திருடனுக்கு கண் போகிறது. அந்த சிறுவன். பெண். முதியவர் எல்லோருக்குமே பார்வை பறிபோகிறது. அரசாங்கத்தின் மருத்துவ துறை இது ஒரு கொள்ளை  நோய் Epidemic என்று அறிவித்து வெள்ளை  வைரஸ் தாக்குதல் white sickness என்று பெயரிடுகிறது. பார்வை போனவர்களையும், லேசாக அறிகுறியோடு பாதிக்கப்பட்டவர்களையும் வண்டி வண்டியாக ஏற்றிக்கொண்டு வந்து  காப்பகம் என்ற பெயரில் ஒரு குடோனில் அடைக்கிறார்கள். பார்ப்பதன் மூலம் பரவும் கொள்ளை நோயாக இருக்கிறது. விடுதியின் வாசலில் நீளமாக ஒரு வழிகாட்டி கயிறு கட்டப்பட்டு எல்லோரும் அதை பிடித்துக்கொண்டே உள்ளே போகவேண்டும். மீண்டும் திரும்ப இயலாது. தனிமைப் படுத்தப்பட்டு ராணுவ வீரர்களை காவலுக்கு வைக்கிறது அரசு. வெளியே வந்தால் கேள்வியின்றி  சுடு என்று சொல்கிறது. 

முதலில் இருவர் மூவர் என்று ஆரம்பித்து ஏழு பேர் அடைக்கப்படுகிறார்கள்.  ஊருக்கு வெளியே ஆட்களில்லாமல் போன மனநல விடுதி ஒன்றை அவசரமாக திறந்து பார்வை போனவர்களை  அனுப்புகிறார்கள். ஒரு விடுதியில் ஒரு ஆளோடு ஆடையின்றி சுகித்திருந்த ஒரு பெண்ணுக்கும் பார்வை போகிறது.  எல்லோரும் இந்த காப்பகத்துக்கு கொண்டு வரப்படுகிறார்கள். வாசலில் இருந்து ஒரு கயிறு கட்டப்பட்டு அதை பிடித்துக்கொண்டு இவர்கள் உள்ளே சென்று விடவேண்டும். படுக்கைகள் இருக்கின்றன.  உணவுகள் அனுப்பப்படும். விடுதி இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு ஒரு புறம் பார்வை முற்றிலும் போனவர்கள் மறுபுறம் பாதிப்புக்கு உட்பட்டவர்கள். பாதிப்பு ஆனவர்களுக்கு முழுதும் பார்வை போனால் அவர்கள் இந்த பக்க விடுதிக்கு அனுப்பப்படுவார்கள்.
ஆனால் உதவிக்கு என்று யாரும் அருகே வர மாட்டார்கள். தங்களது எல்லா தேவைகளையும் தாங்களே கவனித்து கொள்ளவேண்டும். சாப்பிட்ட பிறகு மீதி இருப்பவை பார்சல் குப்பைகள் எல்லாவற்றையும் எரித்து விட வேண்டும். என்ன நடந்தாலும் யாரும் வர மாட்டார்கள். உள்ளே தீவிபத்து நடந்தால் அவர்களேதான் அணைத்துக்கொள்ளவேண்டும். இதெல்லாம் ஒரு ஒலி பெருக்கி மூலம் அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

இப்படி வண்டி வண்டியாக சுமார் முன்னூறு பேர்வரை அடைக்கப்படுவது வரை இருந்து பிறகு நிரம்பி விடுகிறது. அங்கே அவர்கள் படும் இன்னல்கள், உரையாடல்கள், முரண்கள், சண்டைகள், தவிப்புகள், உதவிகள், பசி, இச்சைகள், உடல் உபாதைகள், மரணங்கள், ஆலோசனைகள்,பரஸ்பர உதவிகள் என்று நீள்கிறது நாவல். இறுதி அத்தியாயம் வரை நாமும் குடோனுக்குள்ளேயே இருக்கிறோம். அங்கே வெவ்வேறு சிக்கல்களால் உருவாகும் மரணங்கள் தவிப்பை உண்டாக்கினாலும், பிணம் ஒரு பக்கம் இருக்க சற்று தள்ளி அவரவர்கள் படுத்து தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். பிணத்தை நாமேதான் புதைக்க வேண்டும் என்று டாக்டரின் மனைவிஅழைத்தாலும் பலரும் வருவதில்லை. சிலரின் உதவியுடன் அந்த பிணம் உள்ளேயே புதைக்கப்படுகிறது.

சரி அவர் யார் ? ஏன் சாகிறான் ? அந்த கார் திருடன்தான் அவன். இப்போது குருடனாகி போனவன். தான் திருடவில்லை என்று சாதிக்கிறான். காரை பறிகொடுத்த அந்த குருடர் கேட்க சண்டை வலுக்கிறது. அடித்துக் கொள்கிறார்கள். (அடிக்க முற்பட்டு காற்றில் கையை வீசிக்கொள்கிறார்கள் ). பிறகு உருண்டு புரண்டு சண்டை. ஒரு நாள் சிறுநீர் கழிக்க எப்படி செல்வது எங்கே செல்வது என்று தவித்து கழிவறையை டாக்டர் மனைவி கண்டுபிடித்து சொல்ல, வழி தவறி விடாமல் இருக்க ஒருவர் தோளை மற்றவர் தொட்டபடி வரிசை ஏற்படுத்தி நகர்ந்து செல்கிறார்கள். இந்த திருடன், கண் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பின்னால் நிற்கும்போது அவளை தகாத முறையில் தொடுகிறான். முதலில் கண் தெரியாமல் தொடுவதாக நினைக்கிறாள். பிறகு அவன் நோக்கம் புரிந்து அவனுடைய காலை தனது குதி செருப்பு காலால் உதைக்கிறாள். காயம் உண்டாகி ரத்தம் வழிகிறது.  உனக்கு எங்கே காலை வைக்க வேண்டும் என்று தெரியாத என்று கூச்சலிடுகிறான். பதிலுக்கு அவள் உனக்கு எங்கே கையை வைக்க வேண்டும் என்று தெரியாதா என்று கத்துகிறாள். இந்த காயம் மருத்துவம் இல்லாமல் சீழ் பிடித்து அந்த இடமே நாற்றம் வீசுகிறது. கால் வீங்கி மரத்து போய் அழுகி அவன் இறந்து போகிறான். அவன் மேல் கோபமுற்று அவனை உதைத்த பெண் இப்போது குற்ற உணர்ச்சி கொள்கிறாள். நான் அப்படி உதைத்திருக்க வேண்டியதில்லை என்று. இறப்புக்கு முன் அவனும் தனது செய்கைக்கு மன்னிப்பு கோரி விடுகிறான்.  பார்வை பறிபோன நிலையில் கூட தன்னைப்போலவே பார்வை இழந்த பெண் என்ற நாகரிகம் கூட  இல்லாமல் இச்சைக்கு உட்பட்ட போது, அதனால் சம்மந்தப்பட்ட இருவரின் உணர்வும் மரணத்தின் முன்னால் மெதுவாக மாறிவருவதை பார்க்க முடிகிறது ஒரு சிறுவனுக்கு பார்வை போகிறது. அம்மா அம்மா என்று பிதற்றி அழுது கொண்டே இருக்கிறான். கண்சிவப்பு நோயுற்ற பெண் அவனை ஆதரவுடன் கவனித்து கொள்கிறாள்.

நாவலில் அனைவருமே பார்வையற்றவர்கள். டாக்டரின் மனைவி மட்டுமே கண் தெரிந்து ஆனால் குருடராக இருப்பதாக பொய் சொல்லி செயல்படுகிறார். ஓரிருவருக்கு அதை ஊகிக்க முடிகிறது. ஆனால் அவர்கள் அதை வெளியே சொல்வதில்லை. 'பொய்மையும் வாய்மை இடத்த'.  உலகம் எல்லோரும் குருடர்களாக இருக்கும்போது நான் மட்டும் அனைத்தையும் பார்க்க முடிவது என்பது பெரும் வலி என்று ஒரு அருமையான வரி வருகிறது.

இப்படி பலவித இன்னல்கள், நிகழ்வுகள், உணவு மறுக்கப்படும்போதும் அநியாயங்கள் செய்யப்படும்போதும் உருவாகும் போராட்ட நிலை, உள்ளேயே பொறுக்கித்தனங்கள் செய்யும் ரவுடிகள் கூட்டம், பாலியல் சுரண்டல்கள் உருவாகின்றன. டாக்டரின் மனைவி மட்டுமே கைக்கெடிகாரம் கட்டிக்கொண்டிருக்கிறாள். மற்றவர்களுக்கு இரவு பகல் என்பதே தெரிவதில்லை. பின்னால் வந்து சேர்ந்து கொள்ளும் ஒரு கண் கட்டுப்போட்டிருக்கும் முதியவர் ஒரு ரேடியோவை கொண்டு வருகிறார். அதன் மூலம் வெளியுலக செய்திகள் சிறிது நாட்களுக்கு தெரிகிறது.
பின்னால் வரும் பார்வை போன நோயாளிகளில்  ஒரு ரவுடி கைத்துப்பாக்கியால் கூரை நோக்கி சுட்டு எல்லோரும் தங்களிடம் இருக்கும் பணம் பொருள் எல்லாம் தன்னிடம் தந்துவிடவேண்டும். விடுதிக்கு வரும் உணவை தான்தான் அவரவர் பணத்துக்கு தகுந்தபடி விநியோகிப்பேன். பதுக்கி வைத்திருப்பது தெரிந்தால் அடுத்த நிமிடம் மரணம்தான் என்கிறான்.  என்று அக்கிரமம் செய்ய அனைவரும் உயிருக்கு  பயந்து கொடுத்து விடுகிறார்கள். டாக்டரின் மனைவி ஒரு சிறிய நகம் வெட்டும் கத்திரிக்கோல் தவிர பிற அனைத்தையும் கொடுத்து விடுகிறாள்.

அந்த டாக்டர் ஒரு சமயம் எழுந்து வந்து அந்த கண்சிவந்த நோயுற்ற பெண் அருகில் வருகிறார். அவளருகே அமர்ந்து தொடுகிறார். அவர்கள் உடலுறவு கொள்வதை தூரத்தில் இருந்து டாக்டர் மனைவி பார்த்துவிடுகிறாள். இவர்கள் அருகில் வந்து அவளை மெல்ல தழுவி கொடுக்கிறாள். அவளுக்கு தெரியும் இவளுக்கு கண் பார்வை உண்டு என்பது.  பின்னொரு சமயம் துப்பாக்கி சூடு முடிந்து திரும்புகையில் ஒரு ஓரமாக இருவர் தரையில் சல்லாபிப்பது இவளுக்கு தெரிகிறது. கண்கள் இல்லாதவர்கள் உலகில் கண்கொண்டு இருப்பது விதவிதமான சங்கடங்களை தருகிறது.
ஒரு நாள் அவன் உணவுகளை தரும்போது நாளை முதல் உங்கள் கூட்டத்தில் இருந்து எங்கள் சுகத்துக்கு பெண்கள் வரவேண்டும் என்கிறான். அனைவரும் கொதிக்கின்றனர். வராவிட்டால் சுடப்படுவார்கள் என்கிறான். இதற்கு முன்பு துப்பாக்கி சூட்டில் சிலர் இறக்கிறார்கள். யார் இறந்தார்கள் என்று யாருக்கும் தெரிவதில்லை. 

பெண்களை அனுப்பும் கேவலத்தை செய்ய மாட்டோம் எனும்போது சிலர் பெண்களின் உடலமைப்பு ஆண்களை திருப்தி செய்வதற்குதானே. அதனால் தப்பென்ன என்று சொல்லும்போது, கண்சிவப்பு நோய்க்கு வந்து குருடான அந்த பெண் "அவர்கள் ஆண்களை வரச்சொன்னாள் நீங்கள் யார் போவீர்கள் என்று கேட்கிறாள். அனைத்து பெண்களும் பிறரும் சிரிக்கிறார்கள். ஆனால் உயிர் முக்கியம்.  கடைசியில் தூக்கமின்மை நோயால் அவதியுறும் ஒரு நடுவயது பெண் நான் போகிறேன் என்கிறாள். டாக்டரின் மனைவி தானும் செல்வதாக சொல்ல அந்த பெண்ணும் சொல்ல அனைவரும் தட்டு தடுமாறி அவர்கள் பகுதிக்கு செல்கிறார்கள். இவர்கள் வரும் சப்தம் கேட்டு அவர்கள் குதூகலித்து கேலி செய்து அனைவரையும் வன்புணர்வு செய்கின்றனர். மனித தன்மையற்ற ஆணின் குரூரம் வெளிப்படுகிறது. அந்த ரவுடி தலைவன் ஒவ்வொரு பெண்ணையும் தனது கைகளால் தடவி உணர்ந்து தரப்படுத்துகிறான். பிறகு தனக்கு  பிறகுதான் மற்றவர்கள் என்று சொல்லி  இருவரை அழைத்து போகிறான். அதில் டாக்டரின் மனைவியும் ஒருத்த மோசமாக வீணடிக்கப்பட்ட தேகங்களுடன் அவர்கள் தள்ளாடியபடி ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு வெளியே வரும்போது, கால்கள் நடக்க முடியாமல் ரத்தம் வெளியேறி மயங்கி விழுகிறாள் அந்த நடுத்தர வயதுப்பெண். தூங்க முடியாமல் அவதியுற்ற இந்த பெண் இனி நிம்மதியாக தூங்குவாள். ஏனென்றால் அவள் இறந்து விட்டாள் என்று அறிவிக்கிறான் டாக்டர் மனைவி.அவளையும் எப்படியோ ஒருவழியாக குழி தோண்டி புதைக்கிறார்கள்.
மீண்டும் ஒருமுறை அவர்களை அப்படி அழைக்கும்போது கையில் அந்த கத்தரிக்கோலுடன் செல்லும் டாக்டரின் மனைவி அவனை கழுத்தில் ஆவேசமாக குத்தி கொலை செய்கிறாள். கொலை நடந்தது என்றால் பார்வை தெரிந்த யாரோ ஒருவர் இருக்கவேண்டும் என்று சந்தேகம் அவர்கள் கும்பலில் எழுகிறது. ஆனால் முன்வந்து கண்டுபிடிக்க அனைவருக்கும் அச்சம்.
உணவு சரியாக தராமல் இருப்பதால் கோபமுற்ற இவர்கள் கதவு அருகே சென்று போராட முயல்கிறார்கள். ஆனால் வெளியிலிருந்து காவலர்களால் பொத்தாம் பொதுவாக சுடப்படுகிறார்கள். துப்பாக்கி சூட்டினால் சாவுகள் . இறுதியில் ஒரு செயற்கை தீவிபத்தை உண்டாக்கி எல்லோரும் வெளியே வரும்போது, காவல் நின்ற ராணுவத்தினர் காணவில்லை. அவர்களுக்கும் வெள்ளை நோய் தாக்கி விடுகிறது. மொத்த ஊரே  குருடர்களால் நிரம்பி கிடக்கிறது. வீடுகள் கடைகள் சூறையாடப்படுகின்றன. 

டாக்டரின் மனைவி மட்டும் வெளியே போய் உணவு தேடுகிறாள். எங்கும் பார்வையற்றவர்கள் திரிகிறார்கள். தெரு ஓரமாய்  கிடக்கிறார்கள். ஒரு கடைக்கு சென்று பின்புற கதவு வழியாக ஸ்டோர் ரூமில் இருந்து  பைகளில் சுமந்து கொண்டு வருகிறாள். கதவு திறந்து கிடப்பதால் அதை மூடிவிட்டு வருகிறாள். உணவுப்பொருள் வாசனை அறிந்து சில பார்வையற்றவர்கள் தடுமாறி எழுந்து வரும்போது லாவகமாக அவர்களை தவிர்த்து விட்டு ஓடுகிறாள். மழை வருகிறது. விடுதி செல்லும் வழி தெரியாமல் பிறகு கண்டு பிடிக்கிறாள்.அனைவருக்கும் உணவு தருகிறாள்.
இந்த ஆரம்ப நண்பர்கள் மட்டும் ஒன்றாக கிளம்பி தங்கள் வீடுகள் நோக்கி போகிறார்கள். அந்த கண் சிவந்த பெண் வீட்டில் பெற்றோர்கள்  யாருமில்லை. பக்கத்து வீட்டு கிழவி முயல்களை கோழிகளை  சமைக்காமல் பச்சையாக தின்று உயிர்வாழ்கிறாள். வீட்டின் உணவு மேசையில் ரத்தம் படித்த தட்டுக்கள் இருக்கின்றன. அந்த கிழவர் வீடு தனியாள் என்பதால் போவதே இல்லை. ஒரு வழியாக டாக்டரின் வீட்டில் அனைவரும் தடுமாறி வந்து சேர்ந்து தங்குகிறார்கள்.
மழை நீரில் குளிக்கிறார்கள். துணி துவைக்கிறார்கள். இருப்பதை வைத்து சாப்பிடுகிறார்கள். பிறகு டாக்டரின் மனைவி பழைய கடைக்கு சென்று மறுபடி உணவுப்பொருள் எடுக்க செல்லும்போது உடன் வரும் நாய் ஊளையிடுகிறது. வர மறுக்கிறது. மீறி இவள் செல்லும்போது உள்ளே போக முடியாமல் நாற்றம் வீச குமட்டி வாந்தி எடுக்கிறாள். ஏனென்றால் உள்ளே உணவு பொருள் எடுக்க சென்றவர்கள் கதவு மூடி இருக்கவே திரும்பி வர வழி தெரியாமல் அப்படியே செத்து அழுகி இருக்கிறார்கள். அந்த கதவை தான்தான் மூடிவிட்டு வந்தோம் என்பது நினைத்து குமுறி அழுகிறாள்.

அவரவர் தங்களை இஷ்டத்துக்கு ஒரு வீட்டில் சென்று தங்குகிறார்கள். சாலைகளில் பிணங்கள் கிடக்கின்றன. நாய்கள் அவற்றை குதறுகின்றன. பின்னொரு சமயம் நாய்களை நாய்களை கொன்று தின்கின்றன. டாக்டர் மனைவி பசிக்கு உணவிட்டதால் ஒரு நாய் மட்டும் இவர்களோடு கூடவே வருகிறது.  நகரமெல்லாம் குருடர்கள் மயம். அரசாங்கத்திலும் நோய் பரவி விடுகிறது. குருடர்களை நிர்வகிக்கும் குருட்டு அரசாங்கம் என்று ஒரு வரி வருகிறது.
ஒரு நாள் இரவு ஒரு ஆளுக்கு பார்வை கிடைக்கிறது. பிறகு வெவ்வேறு சமயத்தில் ஒவ்வொருக்கும் பார்வை வருகிறது. இதை அறிந்தபின் அந்த டாக்டரின் மனைவி - ஊரெல்லாம் குருடாக இருந்த போது அனைவரின் கண்ணாக இருந்தவள்  - வெளியே வந்து வானத்தை பார்க்கிறாள். வெண்மையாக இருக்கிறது என்று முடிகிறது நாவல். அவளுக்கு இப்போது பார்வை போகிறதா இல்லையா என்று ஊகிக்க முடிவதில்லை.  ஒரு விதமாக சரமாகோ அதை வாசகரின் மன நிலைக்கு தள்ளிவிடுகிறாரோ என்று தோன்றுகிறது.

நாவல் இறுதியில் எப்படி முடிகிறது என்பதை வாசித்து அனுபவிக்கலாம். இறுதியில் டாக்டர் சொல்கிறார். நமக்கெல்லாம் பார்வை பறிபோகவில்லை. ஆனால்  நாம் குருடர்களாகத்தான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். பார்க்க முடிந்த குருடர்கள். ஆனால் பார்ப்பதில்லை. இங்கே நாவல் முழுதும் சொல்லப்படும் குருடு என்பதும், நோய் என்பதும் வெறும் கண்கள் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல என்று பொறி தென்படுகிறது.  இப்போது நாவலை அசை போடும்போது நாவல் வேறு ஒன்றாக தென்படுகிறது.

அதெப்படி வெள்ளையான குருடு. அதற்கு மருந்து இல்லையா. அப்படி ஒரு நோய் சாத்தியமா? ஒருவர் மற்றொருவரை கண்கொண்டு பார்த்தாலே நோய் தொற்று என்பது உண்டா? என்றெல்லாம் நிதர்சன கேள்விகளுக்கு இங்கே இடமில்லை. ஏனென்றால் நாவலில் அதற்கெல்லாம் ஒரு சம்மந்தமும் இல்லை.

Tuesday 21 April 2020

எனக்குப்பிடித்த கதைகள்-பாவண்ணன்

 எனக்குப்பிடித்த கதைகள்
 பாவண்ணன் 
 காலச்சுவடு

பாவண்ணன்  தனது எனக்குப்பிடித்த கதைகள் தொகுப்பில் (காலச்சுவடு) தனது அன்றாட வாழ்க்கையில் காண நேர்ந்த மனிதர்கள் மற்றும் சம்பவங்களை சொல்லி அதனூடாக எழுத்தாளர்களின் சிறுகதை ஒன்றை அறிமுகம் செய்வார்.ஆரம்ப வாசகன் மட்டுமின்றி எல்லோருக்குமே ஒரு 'பார்வை' பரிமாற்றத்தை அலட்டல் இல்லாமல் தருவதாக இருக்கும். பிறமொழி கதைகள் உட்பட 50 கட்டுரைகள் 50 சம்பவங்கள் 50 சிறுகதை அறிமுகங்கள்.
அதில் சந்தேகம் என்ற விஷயத்தை வைத்து லாசரா வின் சர்ப்பம் கதையை அளித்திருப்பார். இதில் சந்தேகம் என்பது பற்றி பாவண்ணனின் பார்வை அருமையாக யிருக்கும். சந்தேகத்துக்கு மருந்தில்லை என்ற தலைப்பில்.
பெண் நண்பர் ஒருவர் வாக்கிங் போகும்போது பேசுகையில் சந்தேகம் என்றால் என்ன என்று கேட்கையில் சொன்னதை உரையாடலாக தருகிறேன்.

சந்தேகம் என்றால் என்ன ?

நமக்கு எதுவெல்லாம் தெரியாமல் இருக்கிறதோ அதெல்லாம் சந்தேகமானவைதான். இதோ இந்த வானம் இருக்கிறது. இதைப்பற்றி நிறைய தகவல்கள் நமக்கு தெரியும். தெரியாத எல்லாமே சந்தேகத்த்துக்கு உரியவையாக இருக்கின்றன

அந்த பெண் 'அப்படியென்றால் வானத்தை முழுக்க' தெரிந்து கொள்ள முடியாதா

'முழுக்க என்ற சொல் தீர்மானமானதல்ல. வளர்ந்து கொண்டே இருக்கும் ஒன்று அல்லவா ?"

முழுக்க தெரிந்து கொள்ள எவ்வளவு காலம் பிடிக்கும் ?

அது காலத்துக்கு அப்பாற்பட்டது. கூடுமானவரை ஒருவரை பற்றி தெரிந்த சித்திரத்தை மனதில் வரைந்து வைத்துக்கொள்கிறோம். அது ஒரு பிடிமானம். நம்பிக்கை. இருவர் சேர்ந்து வாழ்வது இந்தவித நம்பிக்கையில்தான்.

அப்படியென்றால் ஒருவரை பற்றிய சந்தேகத்துக்கு தெளிவே இல்லையா ?
அவரை பற்றி தெரிந்த தகவலை வைத்து தெளிவை தேடலாம். ஆனால் இது தெளிவு என்று தீர்மானமாக ஒருபோதும் சொல்ல முடியாது.

ஏன் அப்படி குழப்புகிறீர்கள் சார் ?

மனம்தான் காரணம். விலங்கை பழக்குவது போல மனதை பழக்கலாம். ஆனால் அது ஒரு கட்டம் வரைதான். ஏதோ ஒரு சமயத்தில் அதன் சுதந்திரம் வெளிப்பட்டே தீரும். ஆணோ பெண்ணோ. அவரவர் மனங்களும் பழகிய செயல்களை விட்டு உதறி செல்லும்போது அந்த திசை புலப்படாமல் போகிறது.

பிறகு அந்த பெண் மெதுவாக சொல்கிறார். என் கணவர் அப்படி ஒரு சுதந்திரத்தை நாடுகிறார் போல தெரிகிறது. தனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் நெருக்கமாக இருக்கிறார் என்று மனம் தளர்ந்து சொல்கிறார்.

'ஊகத்தின் அடிப்படையில் எதையும் முடிவு செய்யக்கூடாது' என்று இவர் எச்சரிக்கிறார்.
"ஊரெல்லாம் சொல்லியாகி விட்டது. நாந்தான் கடைசியாக சொல்கிறேன்" என்கிறார் அந்த பெண். அவராவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று அந்த பெண் சொல்லிவிட, விரைவில் அவர்கள் விவாகரத்து பெற்று விடுகிறார்கள்.

இரண்டாண்டுகள் கழித்து பார்க்க நேரும்போது அந்த கணவர் தனியாகவே வாழ்ந்தார். மெதுவாக கேட்டபோது 'அந்த பெண்ணோடு உண்மையிலேயே எந்தவிதமான உறவும் இல்லை. வியாதிக்கு மருந்து உண்டு. சந்தேகத்துக்கு எந்த மருந்தை அளிப்பது' என்று வறட்சியாக சிரிக்கிறார்.

இதை சொல்லிவிட்டு சர்ப்பம் கதையை சொல்கிறார். அக்கா. தங்கை. அக்கா திருமணம் செய்துகொண்டு எங்கேயோ தூரத்தில் இருக்கிறார். தங்கை சுட்டியான பெண். திருமணத்தன்று சகஜமாக எல்லோரோடும் உரையாடி, மாப்பிள்ளையோடு கூட தமாஷாக நடந்து கொள்கிறாள். மாப்பிள்ளைக்கு எடுத்துப்போன காபி சிந்திவிட விளையாட்டாக நக்கி குடித்திவிடுகிறாள். முதலிரவுக்கு வைத்த இனிப்புகளை கொஞ்சம் சாப்பிட்டு விடுகிறாள். கட்டிலில் படுத்து தூங்கிவிடுகிறாள். அதன் பிறகு வெகுகாலம் கழித்து அக்கா வீட்டுக்கு செல்கிறாள். மல்லிகை பூவில் தங்கை விருப்பம் கொள்கிறாள். இவள் அலர்ஜி என்று ஒதுக்குகிறாள். மனைவியின் தங்கைக்காக பூ கட்டிக்கொண்டு இருக்கிறார் கணவன். சமையலறையில் பாம்பு என்று கத்தி சூழலை கலைக்கிறாள். பிறகு அது கயிறு என்று தெரிகிறது. ஒரு நாள் 'அம்மாவுக்கு சீரியஸ் என்று தந்தி வந்ததாக சொல்லி' அழுது ஆர்ப்பாட்டம் செய்து அம்மாவை கவனிக்க தங்கையை அனுப்பி வைக்கிறாள். வீட்டுக்கு வரும் தங்கை அம்மா நலமுடன் இருப்பதை காண்கிறாள்.
சந்தேகம் என்ற முள் கீறியவுடன் எதையும் செய்ய ஒருவர் தயாராகி விடுகிறார். அது கயிற்றை பாம்பு என்று நம்ப தயங்குவதில்லை.
எந்த சந்தேகத்தையும் ஒதுக்க முடியாது. அதே சமயம் எந்த சந்தேகத்தையும் நிரூபித்து நிறுவி அழித்துவிடவும் முடியாது. மன அமைப்பு அப்படி என்கிறார் பாவண்ணன்.

Monday 20 April 2020

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர் - கிழக்கு பதிப்பகம்

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்
 போகன் சங்கர்
 கிழக்கு பதிப்பகம். சென்னை
044-4200-9601 

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பில் உள்ள கதைகளில் ஏறக்குறைய மூன்று விஷயங்கள் ஊடுபாவி அலைகின்றன - குழந்தைகள் , மரணம் , மெல்லிய காமம். அவை நெடிஅடிக்காமல் புதுப் புத்தகத்தின் வாசனை போல மெல்ல கசிகிறது.

குறிப்பாக கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் கதை பற்றி கொஞ்சம்.

உம்மிணி சேச்சி அழகும் - சற்று வசீகரமும் - தைரியமும் கொண்டவள். அவள் வரையும் கிருஷ்ணன் கோலம் பிரசித்தமானது. நின்று ரசிக்காதவர்களே இல்லை. நிறைய பெண்கள் கோலமிடுகிறார்கள் ஆனால் சேச்சி கோலம் போடுவதற்காகவே பிறந்தவள் என்பது கதையின் முதல் வரி. இவை கதையில் வரும் குறுப்பு, பணிக்கர் மற்றும் கதை சொல்லியால் ஆங்காங்கே குறிப்பிடப்படுகிறது. கோலம் போடும்போது அவளது வாளிப்பை குறுப்பு பார்த்துக்கொண்டே பைபிளை இறுக்கி அணைத்துக்கொண்டு போவார். அவள் வரையும் கிருஷ்ணனை நோக்கி அவளது ஸ்தனங்கள் பாய்கின்றன என்பார் பணிக்கர்.

அவளுடைய கணவன் பெரும்பாலான அழகுணர்ச்சி உள்ள கதைப் பெண்களின் கணவர்களை போலவே சுவாரஸ்யமற்றவன். சமையல் வேலை. உடல்மேல் எப்போதும் ஊசக்குழம்பு வாசம் வரும். அவன் ஒரு 'பொட்டன்' . கிருஷ்ணனும் தெரியாது கோலமும் தெரியாது" என்கிறார் பணிக்கர். உம்மிணியை அவன் பொட்டி திறக்காத சேச்சியாகவே வைத்திருந்தான்" என்ற வரி போதுமானது. அங்குள்ளவர்களுக்கு சேச்சி மேல் ஒரு ஏக்கம் உண்டுதான். பெண்களின் காமம் ஊறல், அவர்கள் பெற்றுவிடக்கூடிய தீவிரத்தின் சாத்தியங்கள் எல்லாம் பேச்சினூடே சொல்லப்பட்டு விடுகின்றன. உம்மிணிக்கு நாமெல்லாம் தான் உதவி வேண்டும் என்று பணிக்கர் சொன்னபோது எல்லோரும் உரத்த குரலில் ஆமோதித்தாள் என்றும் போகனின் நையாண்டி சரியான இடத்தில் விழுகிறது. இங்கிருக்கும் கிருஷ்ணர் தொப்பையும் சாளேஸ்வரமும் விழுந்துவிட்டவர்கள் என்கிறார். ஆனால் வாலிபர்களைக்கூட அவள் பொருட்படுத்துவதில்லை. ஒருவனையும் கிருஷ்ணனாக ஏற்கவில்லை. அவளைக் கண்டாலே அனைவருக்கும் அச்சம்.

இப்படி கதை நகரும்போது இரண்டு மூன்று நாட்களாக அவளுடைய தினசரி கோலம் காணவில்லை. அவளையும் காணவில்லை. அவளது கோலம் தினம் தினம் ஒரு கிருஷ்ணன் படம்தான். ஒரு நாள் போல மறுநாள் இருக்கமாட்டான் அந்த கிருஷ்ணன். ஆயிரம் முறை போட்டாலும் அதற்கு பிறகும் புதிதாக போட சாத்தியத்தை கொண்டிருந்தவள் உம்மிணி. இதை வெறும் கோலமிடும் திறன் என்று இல்லாமல் தினமும் பெருகும் அவளது கிருஷ்ண கனவு எனலாம். புது புது கிருஷ்ணன் எனும்போது அவளது அடங்க இயலாத ஆசைகள் கோலங்களாக உருப்பெறுவதாக நாம் காண்கிறோம். காணாமல் போன அவளை தேடுகிறார்கள். அவள் கோலப்போட்டியை கூட காலி செய்துகொண்டு போய்விட்டாள். ஆனால் அவள் புருஷன் அதை கண்டுகொள்ளாமல் நடமாடி வந்தான்.நிறைய பேருக்கு வருத்தமும் ஏமாற்றமும். ஒருவாறாக அவளும் அவளளது கோலமும் இல்லாத வேட்டை அவர்கள் பழக துவங்கிவிட்டனர். பின்பு ஒரு நாள் ஒரு மழையின் போது குழித்துறை நதியோரம் உடலாக - உடையற்ற உடலாக கரை ஒதுங்குகிறாள். மீன்கள் அவளது உடலை கொத்தி இருப்பதை போகன் ஓரிரண்டு வரிகளில் சொல்லும்போது உடல் வனப்பு சட்டென அசூசை கொள்கிறது. அதற்கு காரணமானவனை கண்டுபிடிக்கையில் - எங்கு தேடியும் முடியாமல் ஒரு வீட்டில் கிருஷ்ணன் ஓவியமாக வரையப்பட்டுள்ளதை வைத்து - அவன் கருப்பாக சொட்டையானவனாக இருக்கிறான். அவனை அவள் தேர்ந்து கொல்வதற்கு எந்த காரணமும் இருக்கவில்லை. அவன் பெயர் கிருஷ்ணன்.

ஊரின் வளம் மிகுந்த அழகியாக இருந்தவளுக்கு மனத்தின் ஆசைகளே கோலங்களாக எழுகின்றன. அர்த்தமற்ற கணவனோடு உள்ள அவளுக்கு தனது மனதுக்கு உகந்த ரகசியமான ஒரு கற்பனை ஆண்மகன் ஒருவனை அவள் கிருஷ்ணனின் கோலங்களாக இடுகையில் - அந்த பெயருள்ள ஒருவன் நிஜமாக கிடைக்கும்போது அதுவே போதுமானதாக இருக்கிறது. உண்மையில் அவள் காமுற்று உடன்சென்றவள் அந்த கருப்பான சொட்டையாக உள்ளவன் அல்ல. அவன் அவள் வரைந்த கோலத்தின் நிழலையொத்த நிஜம். கிருஷ்ணனுக்கு ஆயிரம் நாமம் போல தினமொரு கிருஷ்ணன் கோலம். ஆனால் அவளது கிருஷ்ணன் ஒருவன்தான். தாம்பத்தியம் வறண்ட அவளது வாழ்வில் கிருஷ்ணன் என்ற பெயரே ஒரு குறும்பான இளைஞனாக எழுகிறது. அவள் கோலா கிருஷ்ணனின் ஒருவிதமான ஆண்டாள்தான். நியதிக்கு உட்பட்ட நமது சமூகத்தில் ஒரு சராசரியான பெண்ணின் அந்தரங்க ஆசைகள் எதுவும் அடையாளம் பெறுவதில்லை. கிணற்று நீர்போல சில பெண்களின் ஆசைகள் இருந்தாலும் ஆழ்துளைக் கிணற்று நீராகதான் பல பெண்களின் விழைவுகள் மெளனமாக தேங்கி கிடக்கின்றன. தாங்கள் வெளிப்படையாக ஒதுக்கப்படும்போது அவர்கள் உள்ளூர பிறரை ஒதுக்க துவங்குகிறார்கள். அவர்களது மனதிற்குள் புகைந்து எழும் தாப உருவம் பிடிபடாதது. அது பேருருக் கொள்ள ஆரம்பிக்கையில் அவர்களே புகையுருவமாகி மிதந்து பறக்கிறார்கள் எல்லைகளை அழித்துக்கொண்டே. இந்த கதைக்கு ராமரின் என்று பெயர் வைத்திருந்தால் கதையே பிடிபடாமல் போகும் என்பதில்தான் இந்த கதையின் உள்ளீடு இருப்பதாக சொல்வேன். இது ராமன் கிருஷ்ணன் என்ற ஒற்றைப்பரிமாண எதிர்நிலைப்பாடு அல்ல. குறுகிய பொருள் கொண்டது அல்ல.

ஒரு இடத்தில் 'கிருஷ்ணன் இந்திய பெண்களின் ஆழ்மன ஆசைகளின் மொத்த வடிவம்' என்கிறார் பணிக்கர். இந்துப் பெண்கள் என்று திருத்துகிறார் மத போதகர். பணிக்கர் இந்தியப்பெண்கள் என்று உறுமினார் என்று ஒரு வரி. இது முக்கியமான வரி என்றே சொல்வேன். இந்திய எனும் விரிந்த பண்பாட்டின் மதம் எனும் ரேகைகள் ஓடினாலும் அவை கையை தனி விரல்களாகி விரிப்பதில்லை. உள்மன நிராசையில் குமையும் எல்லா மதத்தின் பெண்களும் ஒரே விதமான இந்திய பெண்ணின் வெவ்வேறு பிம்பங்களாக இங்கே தெரிகின்றனர். ஒரு விதமாக பார்த்தால் பெண்ணின் உள்ளூறும் விழைவுகளை நெறிப்பதில் எல்லா மதங்களும் ஒன்றாக இருக்கும்போது, எல்லா பெண்களும் ஒன்று போலவே தெரிவது வியப்பொன்றுமில்லையே.

ஒரு முறை பணிக்கர் மருந்து சூரணம் கொடுக்க உம்மிணி வீட்டுக்கு சென்றிருந்தபோது நெய் எடுக்க சமையலறைக்கு போகும்போது நெய்யோடு சர்க்கரை சேர்த்து தின்று கொண்டிருந்தாள் என்கிறார். அவள் பூதகியா ? கோபிகையா ? என்கிறார் போதகர். அதற்க்கு பணிக்கர் 'இரண்டும்தான். இருவருக்கும்தான் கிருஷ்ணன் தேவைப்படுகிறான்" என்கிறார். ஆசைப்படுவதற்கு வித்யாசங்கள் எதற்கு என்பதை போகன் மிக இயல்பாக இங்கே சொல்லிவிடுகிறார்.

மேலும் கதை முடிவில் அவள் ஏன் இறந்தாள் என்ற கேள்வியே இங்கு மறந்து போய்விடுகிறது. ஏனென்றால் அவள் தனது கோலங்களின் மூலம் தனது கிருஷ்ணனை வரித்துக்கொண்டாள். அப்படியான பெயர் உள்ளவனையே அவனாக ஏற்று ஓடிப்போகிறாள். அதற்கு பிறகு அவள் வாழ்ந்த முறையோ மரணத்தின் காரணமோ சொல்லப்படுவதில்லை. ஏனென்றால் அவளுக்கு அது ஒரு பொருட்டே இல்லை.

சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன் - டிஸ்கவரி புக் பேலஸ்

சுபிட்ச முருகன் **(எதுவாக ? எதுவாகவோ ? அதுவாக ?)
சரவணன் சந்திரன்
டிஸ்கவரி புக் பேலஸ். கேகே நகர் சென்னை
discoverbookpalace@gmail.com
8754507070

சமீபத்தில் மிகவும் பேசப்பட்ட நாவல் இது. ரோலக்ஸ் வாச் போன்ற முந்தைய நாவல்கள் வரவேற்கப்பட்டு. இந்த நாவல் அனைத்திலும் சிறந்தது என்று ஜெயமோகன் சொல்கிறார். சராசரியான தட்டையான வாசிப்பு தளமும் ரசனையும் உள்ளவர்களால் இதன் சிறப்பை புரிந்துகொள்ள முடியாது என்று சில பதிவுகளும் வந்திருக்கின்றன. திரிபு நிலையை அனுமானிக்க முடிந்த போதுதான் மெய்யறிதல் பற்றிய இதன் இலக்கிய தரத்தை அறிந்து கொள்ள முடியும் என்று முன்னுரை கோடிட்டு காட்டுகிறது. ஆனால் நாம் வாசிக்கும்போது இத்தகைய முன் அனுமானங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வாசிப்பதுவே நியாயம்.

சற்று நீண்ட பதிவுக்கு மன்னிக்கவும்

இந்திய/இந்து மரபு சார்ந்த நம்பிக்கைகளைப்பற்றிய புரிதல் அல்லது அதற்கான இடத்தை தந்து வாசிக்க தயாராக இல்லாதவர்களுக்கு இந்த நாவல் பெரும் ஏமாற்றத்தையே தரக்கூடும். காரணங்களை கிள்ளிப்பிடிக்க முடியாத இடத்தில் உண்டாகும் மீறல்களை எதிர்பாராமைகளை உள்ளடக்கியது இந்த நாவல். சிறந்த நாவல் என்றால் ஒரு விளிம்பு வழியும் நிறைவோ அல்லது பெரும் தொந்தரவோ நமக்குள் உண்டாகும். எனது வாசிப்பில் இந்த இரண்டுமே ஏற்படவில்லை.

மரபின் ஆழத்தில் இருந்து ஒரு துளியை எடுத்து படைப்பு செய்யும்போது நம்மை அந்த ஆழத்திற்கு இழுத்துச் சென்று மூழ்கடிக்கவேண்டும். நமது காரண அறிவு தற்காலிகமாக நழுவி அல்லது நகர்ந்து இடம் கொடுத்து அதை வாசிக்க நம்மை உந்த வேண்டும். அப்படி அமைய இரண்டு காரணிகள் தேவை. ஒன்று அந்த இடம் மற்றும் காலம் சார்ந்த நுட்பமான மற்றும் விரிவான எழுத்து. மற்றொன்று காலத்தின் வாசனையை நமக்கு காட்டும் மொழி லயம். இந்த இரண்டும் இதில் இருப்பதாக உணர முடியவில்லை என்பது கூட இந்த நாவலை நான் கிரகிப்பதற்கு தடையாக இருக்கலாம்.

கதையின் விதை முரட்டுத்தனமான குணம் கொண்ட தாத்தா. கதை சொல்லியின் தாத்தா. நாவல் முழுதும் தன்மை இடத்திலிருந்து சொல்லப்படுகிறது. சிறுவனாக இருந்தது முதல் வாலிபனாக வளர்ந்த அனுபவத்திலிருந்தும் செவி வழியாக குடும்பத்திலிருந்து சொல்லப்பட்டதில் இருந்தும் தாத்தா பற்றிய பிம்பம் அமைகிறது.

ஒரு நாவலில் கதை என்பது மட்டுமே நாவல் அல்ல என்பதால் இந்த பாத்திரம் நாவலில் எப்படி உள்ளிழுக்கப்பட்டிருக்கிறது, அதிலிருந்து கொண்டே எப்படி அந்த குரல் நம்மிடம் பேசுகிறது என்பதே நாவலின் முக்கிய அம்சம். இந்த நாவலே இழுபட்டு அலைக்கழிக்கப்பட்ட அந்த குரல்தான் என்று சொல்லலாம்.

கதை சொல்லியின் தாத்தாவுக்கு இரண்டு ஆண் இரண்டு பெண் குழந்தைகள். அவர் தனது தங்கையின் மகளை மட்டும் ஏனோ தன் குடும்பத்தில் அந்நியமாக பார்க்கிறார். அவள்தான் இளங்கா அத்தை. சுண்டி இழுக்கும் அழகுடையவள். மஞ்சளை அரைத்து உடலெங்கும் பூசி, முகத்திலும் அப்பி பூசி மஞ்சள் முகம் கொண்டவளாக இருக்கிறாள் அத்தை.

கனவா நனவா என்று அறிய முடியாத நிலையில் படுத்திருந்த நிலையில் தனக்கு முன் பெரிதாக மஞ்சள் நிறம் தெரிய எழுந்து நிற்கும் ராஜநாகத்தை, கண்ணுருவதும் அதிலிருந்து இளங்கா அத்தையின் மரணமும் அவள் நினைவும் சுழல் சுழலாக பிரிய அவளளது குரலைக்கேட்டு தொடர்ந்து துரத்திக்கொண்டு போக ஒரு எல்லையில் கண்ணாடி விரியன் நடுவே கிடையாய் கிடைக்க - பாம்புக்கும் அத்தைக்கும் ஒரு தொடர்பை ஏதோ விதமாக புரிந்து கொள்ள முயல்கிறோம்.

மாமாவுக்கு இளங்கா அத்தை மேல் விருப்பம். ஆனால் வேறு ஒரு பெண்ணை கட்டாயமாக தனது மகனுக்கு கட்டி வைக்கிறார் தாத்தா. வெளியூரில் ஆசிரியையாக வேலை செய்யும் அத்தையை அடிக்கடி சென்று பார்க்கிறார் மாமா. ஊரே அதை பற்றி ரகசியமாக பேசிக்கொள்கிறது . தீக்குளித்து விடுகிறாள் அத்தை. அத்தையின் உடலை கொண்டு செல்லும் இடத்தில் நன்றாக எழுதி இருக்கிறார் சரவணன். அந்த காட்சியும் அது கதை சொல்லியை ஏதோ ஒரு ஆழத்தில் தொடுவதும் நாவல் பிறக்க முக்கியமான ஒரு புள்ளி.

அத்தையின் இறப்புக்கு தாத்தா ஒரு கலகக்காரணியாக இருக்கிறார். மாமாவிடம், 'வேணாம்டா. அவளை பார்த்தா யாருக்குமே அவளோட படுக்கணும்னு தோணும்டா ? தூக்கி வளத்த நான் மட்டும் மிச்சமா என்ன? என்பதாக சொல்கிறார். மாமாவிடம் சந்தேகம் வலுக்கிறது. ஒரு நாள் பேச்சு முற்றுகையில் அவளிடம் 'எங்கப்பன் கூட படுத்திருக்கலாம் ..இப்படி எத்தனை பேர்கிட்ட படுத்தியோ ' என்று வார்த்தைகளை கொட்டிவிடுகிறார். இதில் ‘மிச்சமா என்ன?’ என்ற வார்த்தை மிக அழுத்தமான ஊகங்களை உண்டாக்கும் ஒன்று

பாடையில் தூக்கிக்கொண்டு போனபோது தலையைக்குலுக்கி ஆட்டினாள் அத்தை. 'மிச்சம் வைச்சுட்டு போறாளே ? காடு சேர மாட்டேங்குறா " என் தலையை கயிற்றை வைத்துக்கட்டினார்கள். மனதிற்கு பிடித்ததை காடு போகையில் தூக்கிக்கொண்டு போய் விடுவாளோ என்று குடும்பம் அஞ்சியது. வீட்டுக்கு வந்த மாமாவின் சட்டையை பிடித்து ஆச்சி அறைந்தாள். இந்த சிறு வாக்கியங்கள் கதையின் முக்கிய பகுதியை சொல்வது.

தனது உடலில் வெப்பம் வருவது, அத்தை வந்து கட்டிலில் படுத்து கொண்டாள், கொதிக்கும் எரிமலை வாய்க்குள் கட்டிப்பிடித்து படுத்திருந்தோம், முழங்காலில் என்னைப் படுக்கவைத்தது நெஞ்சுக்கூட்டின் கொதிக்கும் எண்ணையை ஊற்றினாள், கட்டில் இறங்கி போனபோது அத்தை முதுகின் கருப்பு உடையில் வெள்ளை நிறம் வரி வரியாய் இருந்தது. குடிலுக்கு வெளியே வந்து சோளக்கொள்ளைக்கு ஓடினேன். அத்தை ஏதோ சொல்வது காதில் விழவில்லை. வழியில் கண்ணாடி விரியன் படுத்து கிடந்தது. பால்யம் நினைவுக்கு வந்தது என்று சொல்லி சாவுகள் பற்றி நினைவு தொடர்கிறது.

வீட்டில் சாவுகள் விழுகின்றன. மாமா தூக்கில் தூங்குகிறார். பிறகு சின்னா மாமாவும் தூக்கு போட்டு கொள்கிறார். வியாபார புலியான தாத்தாவே ஒரு நாள் தொங்கி விடுகிறார். இறப்புகளும் அதற்கான காட்சிகளும் காரணமுமாக நாவல் நகர்கிறது. ஆனால் தொடர்ச்சியான கதை சொல்லாக இல்லாமல் நினைவில் முன் பின்னாக தவ்விச்செல்கிறது. பாத்திரங்களின் தொடர்பை இப்படி நான் எழுதுவதே ஒரு விதமாய் நாவலுக்கு விரோதமானதுதான்.

' உன் தாத்தன் கூட அவளை விரட்டுவது நிஜம்தான். ஆனா அவள் யாருக்கும் பிடி கொடுக்கலை. உங்க தாத்தா மொத்தமா கருவறுத்துட்டாரு. அவ பழி வாங்காம விடமாட்டா என்று ஆச்சி சொல்கிறாள். பயம் ஒரு பாம்பைப்போல பின் தொடர்ந்துகொண்டே வந்தது என்று எழுதுகிறார். நாவலை நாம் சற்று உணர்lந்து கொள்ள வாய்ப்புள்ள இடங்கள் இவை.

தாத்தா இவனுக்கு செல்லம். அவனோடு வெளியே செல்வார். நான் சொல்லாமல் அந்த இடத்துக்கு போகாதே என்று தாத்தா ஒரு இடத்தை காட்டி எச்சரிக்கிறார்.

இதற்கு பிறகு நாவலின் பெரும்பாலான பகுதி கதை சொல்லியின் வித்யாசமான காம வெளி பற்றியே தன்னிலையை பேசுகிறது. கீர்த்தனா என்ற செய்தி வாசிப்பாளர் காதலியாக இருக்கிறாள். இவனையே மீறும்படியான காமக் களியாட்டங்கள் கொண்டவளாக கீர்த்தனா இருக்கிறாள். பெண்களைக்கண்டால் அல்லது அவர்களின் நினைவில் தனது குறியை தடவி உணர்ச்சியேற்றிக்கொள்ளும் பயக்கும் இவனை முழுக்க ஆக்கிரமிக்கிறது.

ஏறக்குறைய நாவலில் காமம் பற்றி வரும் இடங்கள் முழுதும். இதற்காக, பெண்களை ஸ்பிரசிக்கும் நோக்கத்துக்காக கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொள்கிறான். தன்னைப்போல் பழக்கமுள்ள பலரின் நட்பும் கிடைத்து ஒரு நட்பு வட்டமே உருவாகிறது. மயிலாப்பூர் கோவில் முதல் பல கோவில்களுக்கு செல்கிறான். எல்லா இடத்திலும் பிடிபட்டு அடிபட்டு நைய புடைக்கப்படுகிறான். செல்லுமிடத்தில் இப்படிப்பட்ட பழக்கமுள்ளவர்கள் ஒருவரை ஒருவர் எப்படியோ கண்டு கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.

அர்ச்சனாவுடன் காமத்தில் ஈடுபட்டாலும் உச்சங்களை தொடுவதில் ஒருவித அச்சம் அவனுக்கு இருக்கிறது. அதை அவளும் உணர்கிறாள். ஆண்மையற்ற ஒருவனின் கதை அல்ல இது. பணி புரியும் இடத்தில் எதிரே உள்ள பெண்ணைப் பார்த்துக்கொண்டு ரசித்துக்கொண்டே இப்படியான 'கர' லீலைகளில் அவன் ஈடுபடுவது வெளியே தெரிந்துபோய் பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. ஒரு பெண்ணே அவனுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு. கூட்டத்தில் பெண்களை முறையின்றி தொடுவது, அடி படுவது, தனியாக வரும் பெண்களை விட கணவன்களோடு வரும் பெண்களை பற்றி அதீதமாக கற்பனை செய்வது என்று உறுவித காம பிறழ்ச்சி எண்ணம் கொண்டவனாக இருக்கிறான். தர்காவுக்கு செல்கிறான். பொத்தி வைத்திருப்பதை பார்த்துவிடவேண்டும் என்று துடிப்பு உணர்வதாக சொல்கிறான். தேவாலயங்கள்தான் அவனுக்கு பிடிப்பதில்லை. ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்த கீர்த்தனாவை காண செல்லும்போது அவளோடு பேசிக்கொண்டிருந்தவனோடு இவளை இணைத்து வைத்து கற்பனை செய்து பேசி பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறான். உன்னைப் பார்த்தா யாருக்கும் உன்னோட படுக்கணும்னு தோணிடும் இல்லையா என்று அவளையே கேட்கிறான். 'இது நீயில்லை. நீயா திரும்பிவிடு. உன் கண்களில் மஞ்சள் நிறம் தெரிகிறது' என்று சொல்லி விட்டு போய்விடுகிறாள். அவனை மீறி அவன் வாயிலிருந்து தெறிக்கும் இந்த வார்த்தை அவனது மாமா அத்தையிடம் கேட்ட அதே வார்த்தை. இப்படிப்பட்ட கனமான இடங்கள் எல்லாம் மிகவும் தட்டையாக அமைந்திருக்கின்றன. மரமான கனவுத்தன்மை கொண்ட புனைவு மொழியை தவிர்க்கும் உபாயம் இப்படிப்பட்ட இடங்களில் தோற்று போகிறது.

ஒருநாள் கற்பகாம்பாள் கோவிலுக்கு சென்று ஒரு பெண்ணை தொடர்ந்து கொண்டு போய் அவள் கூட்டத்தில் கரைத்துவிட அம்மன் சிலையை பார்க்கிறான். கால் கட்டை விரலில் இருந்து பார்த்துக்கொண்டு போகிறான். மார்பை பார்க்க முயலும்போது மஞ்சள் ஒளி பட்டு துலங்க இனி இங்கே வரவே கூடாது என்று ஓடி வந்து விடுகிறான்.

மதுரை கோவிலுக்கு செல்கிறான். இப்படி நீளும் நாவல் பழனிக்கு செல்வதில் திருப்பம் கொள்கிறது. இடுப்புக்கு கீழே அடிபட்ட நாயொன்று இவனது கண்ணில் படுகிறது. அது ஒரு எச்சில் சாமியாருக்கு அருகில் எப்போதும் கிடக்கிறது. முன் இரண்டு காலை மட்டும் ஊன்றி பின்பாகத்தை இழுத்துக்கொண்டு நகர்கிறது. இவனும் அங்கே அப்படித்தான் நகர்கிறான். கோவில் இடங்களில் படுத்துக் கொள்கிறான்.

அந்த சாமி பேசாதவர். குடிசையில் எப்போதும் இருப்பார். வேப்பங்குச்சியால் பல் துலக்கி எச்சில் துப்பியபடியே இருப்பார். யாரையாவது திட்டுவார். துப்புவார். அவர்களுக்கு நல்லது நடக்கும். இந்த சாமியார் பாத்திர படைப்பு சேஷாத்ரி சுவாமிகள் மற்றும் திருவண்ணாமலையில் இருந்த ஒரு சாமியாரை நினைவுக்கு கொண்டுவருகிறது. சாமியாருக்கு இவனுக்கும் ஒரு உள்ளார்ந்த தொடர்பு நிலவுகிறது. அவர் இவனை தனது சீடன் என்று சொல்லும் அளவுக்கு. சரியான உடை இல்லாமல் தவழ்ந்து கொண்டு நகரும் இவனை சின்ன சாமி என்றே மக்கள் அழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சாமியாரால் மழை பெய்யும் என்று ஊர் எதிர்பார்க்கிறது. ஆனால் கடைசி வரை பெய்வதே இல்லை. வெப்பம் ஊரை பொசுக்க்குகிறது. மரணங்கள் நிகழ்கின்றன.

நாவலின் பிற்பகுதி முழுதும் இப்படி பழனியில் (ஊரின் பெயர் அப்படி நேரிடையாக சொல்லப்படவில்லை) அனாதைத்தனமான கதை சொல்லி பற்றி, சாமி பற்றி பலதும் பேசுகிறது. ஆனால் கீர்த்தனா முகம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போய்விடுகிறது. அங்கு வரும் மலையாள பெண்களை பார்க்கிறான். அவனுக்கு உடலெல்லாம் புண்கள் வருகின்றன. தனது அடி வயிற்றின் ரோமங்களை பிய்த்து பிய்த்து புண்களாகின்றன. ஆனால் அவை ஆறிப்போகின்றன. காயங்களின் தடங்கல் இல்லாமல்.

இவனுக்குள் ஒரு கோவணம் மட்டுமே இறுதியில் கிடைக்கிறது.

கோவில் வரும் கூட்டத்தில் நடுவே இவன் கைகளை முன்னாள் கூப்பியபடி முதலை நகருவது போல செல்கிறான். 'ஒரு வேல் போல கூட்டத்தை கிழித்துக்கொண்டு போனேன்' என்று ஒரு வரி வருகிறது. இதுவரை பெண்களுக்காக கோவில் கூட்டத்துக்கு சென்றவன் இப்போது அவனை சுற்றி அவனை சாமி என்று சொல்லி பெண்கள் கூட்டம் இருக்கிறது. இந்த மாற்றத்தை மெதுவாக நாவல் சொல்லிப்போகிறது.

நாவலில் பின்பகுதியில் பல இடங்களில் அவனது எண்ணத்துக்கு பதில் சொல்லும்படி அல்லது கட்டளையாக பல முறை குரல் ஒன்று கேட்கிறது. இளைஞர் குரலாய் முதிய குரலாய் முகமற்ற குரலாய். நாவலில் இப்படி அடிக்கடி குரல் கேட்பதும் அதை அவன் தொடர்வதும் கொஞ்சம் செயற்கை தனமாக இருக்கிறது. இப்படியான இடங்கள் செறிவான மொழியின் மீது சவாரி செய்யும்போது இப்படி தட்டையாக தோன்றாது. ஆனால் இங்கே அப்படி நிகழவில்லை.

இப்படி குரலால் உந்தப்பட்டு மலை மேல் செல்கிறான். அங்கே யாரை பார்க்கவேண்டும் என்று குரல் சொல்கிறது. முருகனுக்கு கணக்கு சமர்ப்பிக்கப்படும் அந்த நேரத்துக்கு கருவறைக்குப் போ என்கிறது. உன்னை அழைத்துப் போக ஒருவன் வருவான் என்கிறது. போனால் ஒரு குரல் அழைக்கிறது. வழி சொல்கிறது. மலையை ஏறக்குறைய அடைந்தபின் இனி நீ செல் என்று படிகளில் தங்கிவிட இருளான இடம். மேலும் செல்லும்போது முருகன் தெரிகிறார். பிறகு குரலின் ஆணையில் மலை இறங்கி வருகிறான். அப்போது ஒரு குரல் கிழக்கில் உள்ள வெள்ளியை தவற விடாமல் பார் என்கிறது. காலை இளகும் ஒரு பொழுதில் அது உதிர்கிறது. கீழே இறங்கி வந்து பார்த்தால் சாமியார் சமாதி ஆகி இருக்கிறார். அவருக்கு அந்த குடிசையிலேயே சமாதி அமைக்கப்படுகிறது. இவனை இன்னும் ஒரு நாள் மட்டுமே இங்கு தங்கி இருக்க அனுமதித்து கூட்டம் கலைகிறது. சாமியினரிடம் கதற ஒரு சமயம் அந்த நாய் சமாதி மேல் இருக்கிறது. அதை இவன் தொட அது நகர்ந்து கொண்டே போகிறது. பனை தோப்பு தாண்டி ஒரு இடத்தில் கொண்டு சென்று விடுகிறது. அது இவனுடைய தாத்தா சொன்ன இடம். அங்கே ஒரு பெரிய பள்ளம். அங்கே பெரிய பாம்பு ஒன்று வாயை பிளந்து நிற்க இந்த நாய் அதன் வாய்க்குள் செல்கிறது.

வா என்று சொல்லி உட்காருகிறாள் அத்தை. என்னை தோண்டு நீர் கிடைக்கும் என்கிறாள். அந்த மண் தரையை தோண்டும்போது குங்கும பூசிய பாதம் கிடைக்கிறது. அப்படி கேட்டது தப்புதான் கீர்த்தனா என்று இவன் வாய் முணுமுணுக்கிறது. ஒரு சிலை கிடைக்கிறது. அது சுபிட்ச முருகன். பச்சை ஒளி எங்கும் பரவ அதை அனைக்குமோபிடு நெஞ்சில் கரைந்து போகிறது. கீர்த்தனாவை நினைத்தபடி மண்ணில் வீழ்ந்தேன். என் உடலே குறியாய் மாறி விடைத்துக்கொண்டது என் முதுகில் நீர்த்திவலைகள் பரவின. மழையாக இருந்தேன் என்று முடிகிறது நாவல்.

செறிவான கனமான மொழிப் பிரயோகத்தை தவிர்த்து எழுதி இருக்கிறார். இருப்போனும் சில நல்ல வரிகள் உண்டு.

கிளம்பிப் போனேனா? விரட்டப்பட்டேனா ?

அவளிடம் பிச்சிப்பூ நறுமணம் உடலெங்கும் படரும்

மண்டைக்குள் சிவப்பு பூரான் வழக்கத்தை மீறி வேகமாக ஊர்ந்தது (மாமாவின் சந்தேகம் பற்றி எழுதும்போது )

அவளுக்கு ஒரு மூர்க்கமான அணைப்பு எப்போதும் தேவையாக இருந்தது. அதை கொடுக்கும் கரங்கள் எப்போதும் என்னுடையதாக இருந்தது.

எதுவாக சிந்திக்கிறேனோ அதுவாக நான் இருக்கிறேன் (புத்தத்தில் பொதுவாக சொல்லப்படுவது. நெப்போலியன் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது )

எதுவாக இருப்பாயா அதுவாகவே இருப்பாய்.

நாவலிடையே பூடகமாக தத்துவார்த்தமாக கேள்வி பதிலாக சில இடங்கள் வருகின்றன. தனது பாலியல், வளர்ந்து வரும்போது அறியும் தாத்தா பற்றிய செய்திகள், அத்தையின் நினைவுகள், அச்சம், காமம், பிறழ்வு, பிரமைகள், தவிர்க்கமுடியாமை என பலவும் நாவலில் நூலறுந்த மணிகளாக தனித்து கிடக்கின்றன. அவற்றை நாம் இனம் கண்டு கோர்த்துக் கொண்டு படிக்க முயலும்போது ஒரு உணர்வுருவம் கிடைக்க கூடும். அப்படி முயலும்போது கூட அது காத்திரமான ஒன்றாக எழவில்லை.

இரவில் வானத்தை பார்த்து சில நட்சத்திர புள்ளிகளை இணைத்து ஒரு உருவத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த நாவல் சிறந்த ஒன்று என்பவர்கள் அப்படி இணைத்து பார்த்துக் கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் இப்போதைக்கு நிறைய மேகங்கள் எனக்கு மறைக்கின்றன.

நீலகண்டம் - சுனீல் கிருஷ்ணன் - யாவரும் பதிப்பகம்

நீலகண்டம்

 சுனீல் கிருஷ்ணன்
யாவரும் பதிப்பகம் 
 editor@yaavarum.com
9042461472

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீலகண்டம் - தொண்டையில் சிக்கிய அன்பெனும் நீல முள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதுவரை பல சிறுகதைகளை கச்சிதமாக எழுதியவரும், மேலை இலக்கியங்கள் உட்பட்ட படைப்புகளின் ஆழ்ந்த வாசகரும், படைப்புகளை விமர்சகத்தன்மையோடு எழுதியும் பேசியும், யுவ புரஸ்கார் பெற்றவருமான எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனின் முதல் நாவல் நீலகண்டம்.

ஆட்டிசம் குறைபாடுள்ள ஒரு குழந்தையின் வளர்ப்பு பற்றிய நாவல் என்று ஒரு வரியில் சுருக்க முடியாமல் அப்படியான குழந்தையின் பெற்றோரியம், குழந்தையின்மை பற்றிய மனச்சிக்கல்கள், அதை எதிர்கொள்ளும்போது அவை மேலும் சிக்கலாதல், அதனால் உருவாகும் இடைவெளி, அவற்றை நிரப்ப குடும்பம் எனும் அமைப்புக்கு உட்பட்ட தம்பதிகள் செய்துகொள்ளும் சமரசங்கள், விட்டுக்கொடுத்தல், அல்லது வெடித்தல், அப்படியான குழந்தைகளின் உலகம் மற்றும் நிலைமை, தத்து எடுப்பதற்கான மன நிலை, தத்து எடுக்க செல்லும்போது அங்கு நிலவும் வணிக, சட்ட, மருத்துவமனை சூழல்கள் , அப்போது உருவாகும் நிலைகொள்ளாமை, காதல் திருமணத்தால் விலகிப்போன குடும்ப உறவுகள் நெருங்க முயலும் நிர்பந்தங்கள், அவற்றை ஏற்கும்போது உணரப்படும் மனநிலைகள், என பல்வேறு சிடுக்குகள் உள்ளே நுழைந்து பயணிக்கிறது இந்த நாவல். ஆட்டிசம் குழந்தை வளர்ப்பு பற்றிய முதல்வகை நாவல் என்பதாலும், அந்த குறைபாடு பற்றிய நாவலாக கருணை நரம்புகளை சீண்டும் நாவலாக விரியாமல், அதை எதிர்கொள்ளும் பெற்றோரியம் பற்றி பேசுவதாலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய நாவலாகிறது. சுவாரசியமான நாவலாக அல்ல.

நாவலில் பல இடங்களில் சமூக நிதர்சனம் என்பதை தயக்கமில்லாமல் தொட்டுக்காட்டியபடியே நாவல் நகர்கிறது. உதாரணமாக - ஆட்டிசம் உள்ள தனது குழந்தையை செந்தில் ரம்யா தம்பதிகள் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது என்பது பெரிய சோதனைக்காலம். சாதாரண பள்ளிகளில் சேர்த்தால், உணர்ச்சி கொந்தளிப்பும், பேசி புரியவைக்க முடியாத அல்லது நமது மொழியை புரிந்துகொள்ள முடியாத அந்த சிறு குழந்தை முரண்டு செய்தோ அல்லது மயக்கமுற்றோ விழுந்தால் அது அங்கிருக்கும் பிற சாதாரண குழந்தைகளை பாதிக்கும் என்கிறது பள்ளி நிர்வாகம். ஆனால் அந்த குழதையை புரிந்துகொண்டு அனுசரிக்க வேண்டும் என்று பெற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே சமயம் அந்த குழந்தையை ஸ்பெஷல் குழந்தைகள் படிக்கும் வேறு பள்ளியில் சேர்க்கலாம் என்றால் அங்கே மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருப்பார்கள் என்பதால் அது தனது குழந்தையை பாதிக்கும் என்று இந்த பெற்றோர் அஞ்சுகிறார்கள். இந்த இரண்டு அச்சத்தில் எதை சரி என்று நியாயப்படுத்த முடியும் ? இந்த குரலை செந்திலின் நண்பனின் குரல் மூலம் நாவல் ஒலிக்கிறது. இப்படியாக சில முக்கியமான இடங்கள் நாவலில் உள்ளது.

மேலும் நாவலில் நாட்டார் கதை, புராண உபகதை, வேதாளம் விக்ரமாதித்தன் கேள்வி பதில் வகை, மேஜிக்கல் ரியலிச வடிவம், நாடக வடிவம் போன்றவை ஆங்காங்கே விரவி வருகிறது என்பது புதியதாக இருக்கிறது. இதில் சில சரியாக பொருந்தியும், சில உதிரியாகவும் நிற்கின்றன. இவற்றில் வரும் கிளைக்கதைகள் அனைத்துமே குழந்தை இன்மை அல்லது குழந்தை பெற்றோர் உறவு குறித்த அடையாளம் கொண்டதாகவே உள்ளன என்பதால் அவை நாவலோடு இணைந்து ஓடுகின்றன. சிறுத்தொடர் கதை, சுடலைமாடன் கதை, கிரேக்க துன்பியல் நாடக பாத்திரம் மெடியா, நாகம்மை கதை போன்றவை.

நாவலில் சொல்லப்பட்ட உபகதையின் பாத்திரம் வந்து நாவல் பாத்திரத்தை சந்திப்பது போன்ற உத்தியும் நன்றாக வந்திருக்கிறது. (திலீப் குமார் தனது ரமாவும் உமாவும் நாவலில் இப்படி ஒரு உத்தியை பயன்படுத்தி இருப்பார் என்று நினைவு). சிறுத்தொண்டர் கதையில் சொல்லப்பட்ட சீராளன், நாவல் பாத்திரம் செந்திலிடம் வந்து வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த தன் பெயர் குறித்த அதிருப்தியை சொல்வதும், மரணம் இல்லாத தனது வாழ்வு பெரும் துன்பம் என்பதும், "எனக்கு காலமின்மையும் வேண்டாம்; மரணமின்மையும் வேண்டாம்' என்ற இடம் நமக்குள் கேள்விகளை எழுப்புகிறது.

தகவல் தொழில்நுட்ப துறை மனிதர்களை ஒரு பெரிய மண்புழு போல தின்று தள்ளுகிறது. ரம்யா தனது பணியில் இருக்கும் இறுக்கம் காரணமாக இடையிடையே எதையாவது தின்பண்டம் கொறிக்கிறாள். ஒரு சமயத்தில் அவள் உடல் பருமன் அதிகரிக்கிறது. பிற்பாடு குழந்தை பேறின்மைக்கு அதுவும் ஒரு உப காரணமாக அமைகிறது. குழந்தைப்பேற்றுக்கான மருத்துவம், இந்தந்த நாட்களில் உறவு கொள்ளவேண்டும் என்று சொல்லி உணர்ச்சியை இயந்திர தன்மை கொள்ள வைக்கிறது. (திட்டமிட்ட கால அட்டவணை கலவையிலிருந்து காமத்தை வெளியே தள்ளியது என்று ஒரு அழகான வரி வருகிறது.) அதுவே பிறகு ஒரு ஆயாசமாக மாறுகிறது.

எவ்வளவு படித்த சமூகமாக மாறினாலும், பெண்ணுக்கு குறை எனும்போது இல்லாத அழுத்தம், சீற்றம், ஆணுக்கு குறை எனும்போது அவனுக்குள் உருவாவதையும், விந்தணுவை கொடையாக பெற்று குழந்தை பெறுவதை ஏற்றுக்கொள்வது தம்பதிகளுக்கு பெரிய சவாலாகவே இருப்பதையம் சூட்சுமமாக சொல்லி போகிறது நாவல்.

காதல் திருமணம் செய்துகொண்டதால் பெண்ணோடு உறவை முறித்துக்கொண்டு விட்ட பெண்ணின் பெற்றோர்கள் பின்னொரு சமயம் அவர்கள் மகளோடு இணையும்போது, கணவன் தான் விலக்கப்படுவதாக உணரும் இடம் நிதர்சனமான ஒன்று.

ஆட்டிச குழந்தை வரு வின் உலகம் மற்றும் சிக்கல்கள் பற்றி அமைந்த சிறு அத்தியாயம் யானை பொம்மையின் மூலமாக அவற்றைப் பேசவைத்த இந்த உத்தியில் சுநீல் நல்ல நாவலாசிரியராகிறார்.

நாவலில் நம்மைத் தைக்கின்ற இடங்களில் ஒரு இடம் - ஆட்டிச தத்து எடுத்து வளரும் குழந்தை வரு பற்றி தந்தை செந்தில் தனது அலுவலக சகா முரளியிடம் "வேற எல்லாத்தையும் விட்டு விடலாம் ..இப்ப வரைக்கும் அவ நன்றி விசுவாசத்தோடயே இருக்கா ..அதை என்னால தாங்கிக்கவே முடியலைடை டா " என்கிறான்.

பிள்ளைக் கூட்டல் எனும் தத்தெடுப்பு முறை சமூக வழக்கம் பற்றி சொல்லப்படுகிறது. குழந்தைகள் உற்பத்தி முனையம் எனும் அத்தியாயம் குழந்தைகளை நமது தேவைக்கு தகுந்தபடி உருவாக்கிக் கொள்ள முடியும் எனும் அறிவியல் வாணிகத்தைப் பற்றி கிழித்து தொங்கவிடுகிறது.

இறுதியாக வரு வை அழைத்துக்கொண்டு செந்திலும் ரம்யாவும் குடும்ப சுற்றுலாவுக்கு மகாபலிபுரம் செல்வதும், வண்டியில் இருந்த குழந்தை வரு காணாமல் போவதும் ஒரு திருப்பத்தை உருவாக்குகிறது. தேடிக்கொண்டே இருக்கிறார்கள். வேறொரு தளத்தில் வரு காகம், மீன், அரசமரம், சூரியன், ரயில் என்று ஒவொருவரோடும் போய்க்கொண்டே இருக்கிறாள். செந்தில் ரம்யாவுடன் வேதாளமும் விக்ரமனும் கூட சேர்ந்து குழந்தை வரு வை பலகாலமாக தேடுகிறார்கள். எப்போதுமே கிளிப்பச்சை நிறைத்து கவுனோடுதான் வெளியே வரவேண்டும் என்று அடம் பிடிக்கும் வரு எப்போதும் அதையே அணிகிறாள். தொலைந்து போன அவளை அந்த நிறம் கொண்டே நமது மனமும் தேட ஆரம்பிக்கிறது.

வேதாளம் விக்ரமனிடம் நீலகண்டன் கதையை சொல்கிறது. தேவரும் அசுரரும் மந்தர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு கடைகிறார்கள். தலை வால் என இடம் மாறி நின்றும் கடைகிறார்கள். தாம் அசுரர் தேவர் என்பதை மறந்து கடைகிறார்கள். கடையும் பகுதியை மிக வித்யாசமாக எழுதுகிறார் சுனீல். நாவலின் இந்த பகுதி நிதானமாக நாவலை தலைப்புக்கு கொண்டு சேர்க்கிறது. ஈசன் தன் பிரியர்களின் பொருட்டாக நீளத்தை விழுங்க உமையவள் தொண்டையில் நிறுத்த அதையே ஆசீர்வதிக்கிறார். அமுது நஞ்சாக மாறும் தருணம் ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது. அதை அன்பின் முள்ளாக தொண்டையில் தேக்கியவர்களாலேயே நிகழ்கிறது இவ்வுலகு என்கிறது வேதாளம்.

அமுதும் நஞ்சும் ஒருங்கே பிறக்கும் பாற்கடல்தான் குடும்பம் எனும் லாசராவை தவிர்க்க முடியாமல் நாம் இங்கே நினைவு கூறுகிறோம். ஆனால் இங்கு அமுதே நஞ்சாக மாறுவது என்பது புதிய பரிணாமம் கொள்கிறது. தொண்டையில் நீலமாக நிற்பது நஞ்சு அல்ல. நஞ்சாக மாறிப்போன அமுது என்கிறது நாவல். இப்படியான இக்கட்டான இறுதி புள்ளிகளை நோக்கி நெருக்கும் சமயத்தில் ஏதோ ஒன்றை செய்வதன் மூலம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நீலகண்டர் ஆகிறார்கள்.

இறுதி அத்தியாயம் இந்த நாவல் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக இருக்கும் வர்ஷினி செந்தில் (ஆட்டிச குழந்தை வரு தான்) என்பவள் எழுதியது என்கிறது. சகோதரன் சாகர் விஞ்ஞானியாகி ஆட்டிச குழந்தைகள் பிறரோடு தொடர்பு கொள்ளும்படி ஒரு மின்னணு சாதனத்தை வடிவமைக்கிறான். இந்த நாவலே அப்படியான வர்ஷி ஆட்டிபேட் என்ற சாதனத்தால் எழுதப்பட்டதே என்கிறது இறுதி அத்தியாயம்.

வரு வை அனைவரும் ஒரு புறம் தேடிக்கொண்டிருக்க அவள் மற்றொரு புறம் விளையாட்டாகவே நகர்ந்து கொண்டிருப்பதும், வேதாளம் முதல் மனிதன் வரை அவளை தேடிக்கொண்டிருப்பதாக இருக்கும் இடத்தில் நாவல் தனது முகட்டினை தொடுகிறது. ஆட்டிச குழந்தைகள் நிலை அவர்கள் பெற்றோர் நிலை தவிப்பும், மேன்மையும் கீழ்மையும் கூடியதாகவே இருப்பதாக சொல்கிறது. அதன் பிறகு வரும் அத்தியாயம் சட்டென ஒரு சம்பிரதாயமான நேர்மறையான முடிவை நோக்கி நாவலை தள்ளிக் கொண்டு நிறுத்துகிறது. நாவலாசிரியரின் சிறுகதை ஆசிரியர் முகம் ஆங்காங்கே தென்படுகிறது.

நடப்புலகில் நன்றாக இருக்கிறது என்று எண்ணி தத்து எடுத்து பிறகு ஆட்டிசம் இருப்பதை வளர்ப்புப் பெற்றோர்கள் அறிவதும், அதற்கு பிறகு தங்களுக்காக தம் ரத்தத்தில் ஒரு குழந்தை பிறப்பதும் அப்போது அவர்கள் தங்களுக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் உருவான உறவுகளில் ஏற்படும் அதிர்வுகளும், அதன் கடைசல்களில் தவிப்பதுமான பின்னணியில் - விலகி நின்று சொல்லப்பட்டிருக்கும் நாவல் அதனளவில் முக்கியமான ஒன்று. உணர்ச்சிகரமான நாடகீயமான இடங்கள் உருவாகிவிடுவதை திட்டமிட்டு தவிர்த்து நாவலை சொல்ல முயலும்போது நாம் அதற்கான இடத்தில் வைத்து இந்த நாவலை வாசிக்கவேண்டும்தான்.

மாயன் : ஹூலியோ கொர்த்தஸார் S வாசுதேவன் யாவரும் பதிப்பகம்.

மாயன் : ஹூலியோ கொர்த்தஸார்
S வாசுதேவன்  
யாவரும் பதிப்பகம். வேளச்சேரி. சென்னை
yaavarumarticles@gmail.com; 9042461472
 
ஆளுமை மிகு எழுத்தாளர்களை பற்றிய புத்தகங்கள் முக்கியமானவை. பெரும்பாலும் அவர்களது படைப்புகளை படித்தவர்கள் அதன் ஈர்ப்பில் எழுத்தாளர்களை பற்றி அறிந்து கொள்ள வாசிப்பதுவே அதிகமாக காணப்படும். தமிழில் சாகித்ய அகாதமி இப்படி எழுத்தாளர்கள் மற்றும் ஆளுமைகள் பற்றிய புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளன. ஆனால் இந்த 'மாயன்'
 புத்தகம் அளவுக்கு விரிவும் ஆழமும் கொண்ட ஒன்றை நான் இதுவரை வாசித்ததில்லை. வெறும் சுயசரிதை போன்ற விதந்தோதல்களை மட்டுமே கொண்டதாக இல்லாமல் விரிவாக செறிவோடு இருக்கிறது. மிகுந்த பிடிப்பும் தேடலும் ரசனையும் கவனிப்பும் இருந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும். வாசு அதை செய்திருக்கிறார்.

வாசுவின் போர்ஹேஸ் பற்றிய உரை (பிரம்மராஜன் கலந்துகொண்ட நிகழ்வு) ஒன்றை கண்டபிறகு அவரை கவனிக்க ஆரம்பித்தேன். மேலை இலக்கியங்களை படித்தவர்கள் அவற்றை தமிழில் பேச வேண்டியது முக்கியமான விஷயம். மேலை இலக்கியம்தான் உயர்ந்தது என்றும், அது நமக்கு ஒவ்வாத விஷயம் என்றும் தனித்தனியாக பிரிந்து கொடி பிடிப்பவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் அவற்றை அறிமுகம் செய்ய - சரியாக அறிமுக செய்ய வேண்டியது முக்கியம்.

இலக்கியம் என்பது நாம் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் எழுதப்பட்ட மண் மற்றும் சூழலின் தன்மையை பிரதிபலிப்பதாக அல்லது அது பற்றி பேசுவதாக மட்டுமே அமையும் தன்மை உடையது. அப்படி இல்லாதவை கால ஓட்டத்தில் வெளிறிச் சருகாகும். மேலை இலக்கியங்கள் நமது இந்திய சூழலுக்குள் இயங்க வேண்டிய அவசியம் இல்லை. அவை அவற்றின் சூழலில் எப்படி இயங்கின என்பதை நாம் படித்து உணரவேண்டியது ஒரு இலக்கிய வாசகனுக்கு முக்கியம். ஏனென்றால் நதியைப்போல இலக்கியம் வளர்ந்து ஓடிப் பெருகுவது. வெறும் கோடை மழை அல்ல.

எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் உலகப்போர் என்பது இந்திய இலக்கிய வெளியில் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை. தவிர போர் என்பதே கூட தென்னகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கவில்லை. போர்க்காலங்களில் சங்கு ஊதும்போது விளக்குகள் இரவில் இணைக்கப்படும், ரேஷன்களில் சிக்கல் இருக்கும் போன்ற லௌகீக பார்வைகள் தவிர பெரிதான வேறொரு தாக்கம் இங்கு இல்லை. இன்றைக்கும் அண்டை நாட்டு ஊடுருவல் எனும் அச்சம் நிகழும்போது - குஜராத், ராஜஸ்தான், காஷ்மீர், அருணாச்சல பிரதேசம், கொல்கத்தா போன்ற நகரங்களில் இருக்கும் சிறு பதட்டத்தை கூட நாம் இது வரை உணர்ந்ததில்லை. ஆகவே தென்னகம், குறிப்பாக தமிழகம் பெருமளவில் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து 'கருத்து சொல்லி' போவதே வழக்கமாக கொண்டுவிட்டது.

தேசபக்தி என்பது விடுதலைக்கான அடிப்படை உணர்ச்சிப் பொறியாக இருந்தது. அடக்குமுறைகளின் வெப்பத்தை உணர்ந்தவர்களுக்கு அதன் அத்தியாவசியம் புரிந்திருந்தது. இது இந்திய இலக்கிய வெளியில் பிரச்சாரமாக அல்லது சற்று ஓங்கிய குரலுடன் வெளிப்பட்டது. அல்லது அது பற்றி பெரிதும் பேசாமலே இருந்தது. இந்திய சுதந்திரத்தின் இன்றியாமையை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட மணிக்கொடி, கூட முற்றிலும் வேறு ஒரு பரப்பை அடைந்தது.

எப்போது வேண்டுமானாலும் குண்டு விழுந்து உயிர் போகும் என்ற நிலையில் பெற்றோர்களை இழந்த நிலையிலும் ஒவ்வொரு நாளையும் ஒரு உயிர்வாழும் வாய்ப்பாக கடத்திய சிறுமி ஆனி பிராங்க் டைரிக்குறிப்பை போல ஒரு எளிய படைப்பு தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

சி சு செல்லப்பாவின் சுதந்திர தாகம் நாவல் மட்டுமே விரிவாக பேசி இருக்கிறது. தவிர குஷ்வந்த் சிங் போன்றவர்கள் பிரிவினை காலம் பற்றி எழுதி இருந்தனர். மேலும் சிலரது படைப்புகள் இருக்கலாம். அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு கூட பிரிவினை காலத்தின் பின்னணியில் உள்ளோட்டமாக பேசும் நாவல்தான்.

அரசியல் சமூக நிலவரத்தை பற்றி குரலுயர்த்தி ஆவேசமாக எழுதப்படும் படைப்புகளுக்கு நமக்கு பஞ்சமில்லை. ஆனால் அவை இலக்கிய வடிவம் / அம்சம் பெறுவது முக்கியமானது. சமூக வலிகள் - அது அரசியற் பட்டதாக இருந்தாலும் - பொதுமனத்தில் ஒரு கிள்ளலை, கேள்வியை உருவாக்கவேண்டும். அது குண்டு போடுவதைப்போன்ற ஆவேசத்தில் இல்லாமல், ஒரு பொறியில் தம் எண்ணத்தை எரித்துக்கொண்டு எழும் ஆகுதி போல இருக்கவேண்டும். மண்டோவின் கதைகள் போன்றவை இப்படியான இடத்தில் இருப்பதாக எண்ணுகிறேன்.

பெல்ஜியத்தில் பிறந்து பிரான்சில் அதிகமும் வாழ்ந்த ஸ்பானிஷ் எழுத்தாளர் ஹூலியோ கொர்த்தஸார் பற்றி மூன்று பகுதிகளாக பிரித்து விரிவாக கச்சிதமாக எழுதப்பட்டிருக்கும் படைப்பு இது. மூன்றாம் பாகத்தில் மிகச்சில 'கூறியது கூறல்கள்' இருந்தாலும், அது தடையாக இல்லை.

நாம் அர்ஜென்டினா என்று சொல்லும் இலத்தீன் அமெரிக்க நாடு ஸ்பானியத்தில் அர்ஹென்தினா என்றே உச்சரிக்கப்படுகிறது. இந்த புத்தகம் முழுதும் வாசு அர்ஹென்தினா என்றே எழுதுகிறார். மூலத்தின் விழுமியத்தை அவர் பெற்றுக்கொண்டு சிலாகிப்பதை, அவருடைய ஈடுபாட்டை அறிய, இந்த ஒன்றே போதும்.

பெல்ஜியத்தில் பிறந்து குழந்தை பருவத்திலேயே சுவிட்சர்லாந்து சென்று பிறகு அர்ஹென்தினா வந்து பிறகு இறக்கும் வரை பாரீஸ். கொர்த்தஸார் இறந்தபின் ஊடகத்தை வெளியான இரங்கல் செய்தியில்தான் இந்த புத்தகம் தொடங்குகிறது.

கொர்த்தஸாரின் மூன்று அம்சங்களை தோராயமாக நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம். இதுவரை பழகிய பாதையில் உருளாமல் தனித்துவமான கதை மொழியை உருவாக்கியது - சரியாலிச தன்மை கொண்ட மாயத்தன்மை கொண்ட பாணியில் தனது கதை அம்சங்களை உண்டாக்கியது - அரசியல் பார்வையோடு படைப்புகளை பிற்காலத்தில் உருவாக்கியது. மார்க்கவெஸ், போர்ஹே போன்றவர்களின் பாணி நம் நினைவுக்கு வரக்கூடும்.

உலகப்போர் மற்றும் அதற்கு பிந்தைய காலனிய ஆட்சி மற்றும் அடக்கு முறைகளில் சிக்கி தத்தளித்த நாடுகளில் இருந்து எழுதப்பட்ட படைப்புகள் இவருடையவை. ஆனாலும் போர்ஹேஸ் போன்றவர்கள் அரசியலை தொடாமல் எழுதி இருக்கிறார்கள். இந்தியாவில் நிலவியது போலவே அங்கேயும் கலை கலைக்காக மட்டுமே, கலை மக்களுக்காக மட்டுமே என்ற வேற்றுப் பார்வைகள் நிலவின. தனது சிறுகதையை முதலில் வெளியிட்ட போர்ஹே வை அரசியல் பேசாத படைப்புகளை எழுதுவதால் முற்றிலும் எதிர் நிலையில் இருந்து செயலாற்றி விமர்சித்திருக்கிறார் கொர்த்தஸார்.

இலக்கியத்தில் அரசியல் என்பது ஒரு இசை நிகழ்ச்சியில் கைத்துப்பாக்கியின் தோட்டா வெடிப்பின் ஒலி போல் ஆபாசமானது, தேவையற்றது என ஸ்டெந்தால் குறிப்பிட்டதை சொல்லி எழுபதுகளில் இந்த தோட்டா ஒலியின் அவசியத்தை தேவையை கொர்த்தஸார் வாசகர்கள் உணர்ந்தனர் என்கிறார் வாசு.

கோர்த்தஸாரின் எழுத்து வளர்ச்சியை மூன்று பாகங்களாக சொல்கிறார் வாசு. பேண்டஸி அழகியல் முறை கொண்டது (1950 ) - பிறகு மெட்டாபிஸிக்கல் முறை இணைந்த பேண்டஸி (1960 ) - பிறகு எழுபதுகளில் அரசியல் வரலாற்றை எதிர் எதார்த்த பாணியில் எழுதியது.

ஆச்சரியம் என்னவென்றால், தனிமையை விரும்பி தன்னைஒதுக்கிக்கொண்டு வாழ்ந்து, எழுதி எழுதி சீர்படுத்திக்கொண்டு அரசியல் பற்றிய எந்த பார்வையும் இல்லாமல் ஆரம்பத்தில் எழுதிய கொர்த்தஸார் - அரசியல் அடக்குமுறை காரணத்தால் அவஸ்தைப்பட்டு பணியை ராஜினாமா செய்துவிட்டு போனாலும் அரசியல் பற்றி எதுவும் எழுதாதவர் - பிற்காலத்தில் அரசியல் கலந்து தீவிர படைப்புகளை எழுதினார்.

கொர்த்தஸார் பெல்ஜியத்தில் பிறந்தார். ஆனால் வாழ்க்கை முழுதும் ஐரோப்பிய நிலங்களில்தான். ஆனால் தாய் மண்ணை எப்போதும் நேசித்தபடியே இருந்தார். அவர் அர்ஹென்தினா பற்றி வெளியில் இருந்துகொண்டுதான் எழுத முடிந்தது. பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை தரப்பட்டபோதும் தாய் நாட்டின் குடியுரிமையை அவர் விட்டுவிடவில்லை. பிற்காலத்தில் 'உன்னை எப்போதும் நினைக்கிறேன். எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்' என்று அர்ஹென்தினாவை பற்றி ஏக்கமுடன் எழுதுகிறார். வெளிநாட்டில் சொகுசாக இருந்து கொண்டு பாதிக்கப்பட்ட பிற நாட்டைப் பற்றி எழுதும் அவரது எழுத்து பாசாங்கு கொண்டது என்று அவரது தாயகத்து அர்ஹென்தினா மக்களே அவரை கடுமையாக விமர்சித்தனர்.

லத்தீன் அமெரிக்க மும்மூர்த்திகள் என்று கொர்த்தஸார், போர்ஹேஸ், யுவான் ரூல்போ மூவரையும் சொல்கிறார் வாசு. உளவியல், ஓவியம், சிற்பம், கீழைத்தேய மரபு, உபநிஷத்துக்கள், புகைப்படம், குத்துச்சண்டை, நடனம், ஜாஸ் என சகட்டுமேனிக்கு ஈடுபாடு கொண்டு வாசித்திருக்கிறார். பியானோ கற்றுக்கொள்ள ஆரம்பித்து நிறுத்தி விட்டிருக்கிறார்.

சிறு வயதிலேயே தந்தையால் கைவிடப்பட்டவர். பெண்களால் வளர்க்கப்பட்டவர். அவரது கதையுலகில் பெண்கள் முக்கியம் பெறுகிறார்கள். விவாக ரத்து ஆனாலும் முதல் மனைவிக்கு முதல் திருமணம் மூலம் பிறந்த குழந்தையை இறுதிவரை நேசித்தார். தனக்கு கிடைக்காத அன்பை பாரபட்சம் இல்லாமல் அந்த மகனுக்கு தருகிறார் என்று நினைக்க இடமுண்டு என்கிறார் வாசு. மிகச் சரி. (இப்படியான இடங்களை வைத்து, நமது நாட்டின் இலக்கிய சமூக படைப்புகளோடு ஒப்பிட்டு நாம் பேசிக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசை எனக்கு உண்டு)

இந்த புத்தகத்தில் நான் கண்டுகொண்டது - ஒரு பக்கம் போர்ஹேஸ் அரசியலை தவிர்த்துவிட்டு படைப்புகளை தருகிறார். மறுபக்கம் மரியா லோசா தெளிவாக அரசியல் நிலைப்பாட்டை சொல்லி படைப்புகளை உருவாக்குகிறார். இதில் கொர்த்தஸார் அரசியல் இல்லாத தளத்தில் இருந்து அரசியல் தளத்துக்கு நகர்ந்து வந்து, அரசியல் பார்வையுடைய ஆனால் வெளிப்படையாக பேசாத படைப்புகளை தந்தார். அவருடைய 'இந்த இடமே' அவரை நேர்மறை மற்றும் எதிர்மறை விமரிசனத்துக்கு உள்ளாக்கியது.

கொர்த்தஸார் கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவின் முழு ஆதரவாளர். மரியா வேர்க்ஸ் லோசா வலது சாரி அரசியலோடு இணைந்தவர். ஆனால் ஒருவர் மேல் ஒருவர் மரியாதை கொண்டு இருந்தார்கள். பிடல் காஸ்ட்ரோ சே குவாரா இருவரும் கோர்த்தஸாரின் ஆதர்ச ஆளுமைகளாக இருந்தார்கள். நிக்கராகுவாவின் ஒர்டேகா கியூபாவில் ஆயுத பயிற்சி பெற உதவும் அளவுக்கு பிடலுக்கு நெருக்கமான வராக இருந்தார் கொர்த்தஸார்.

அமெரிக்க அரசு கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு எளிய மக்களை இம்சிக்கும் அரசை எதிர்த்து குரல் எழுப்பும் எழுத்தாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களின் கொர்த்தஸார் ஒருவர். கலைஞர்களை ஒடுக்கும் அதிகாரத்துக்கு எதிராக செயல்பட்டு அதனால் கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவிடம் நெருக்கமாகி காசா என்ற அமைப்பின் மூலமும் செயல்பட்டவர்.

ஆனால் நகை முரணாக, பிடலின் க்யூபா அரசு ஹெபர்ட்டோ படியா வை கைது செய்கிறது. க்யூபா எழுத்தாளர் இன்பாந்தே கடுமையாக பிடல் காஸ்ட்ரோவை விமர்சிக்கிறார். க்யூபா அரசை எதிர்த்து அறிக்கை வெளியிட்டு அதில் கொர்த்தஸாரை கையெழுத்திட சொல்லும்போது அவர் தர்ம சங்கடத்தில் ஆகிறார். அறிக்கையின் சில பகுதிகளை திரு த்திவிட்டு கையெழுத்து போடுகிறார். மற்றொரு அறிக்கை கொடுங்கோலனாக பிடல் இருக்கிறார் என்று அறிக்கை வரும்போது அதில் கொர்த்தஸார் கையெழுத்து போடவில்லை. எழுத்தாளர்களையும் கியூபாவின் பிடல் அரசையும் சமரப்படுத்த முயல்கிறார். இங்கே கொர்த்தஸாரின் அறவுணர்வு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.

ஆனாலும் மிக நெருங்கிய பெடல் காஸ்ட்ரோ வே இவர் மீது கோபம் கொண்டு ஏழு ஆண்டுகளுக்கு க்யூபாவுக்குள் நுழைய இவருக்கு தடை விதிக்கிறார்.

நாவல்கள் எழுதி இருந்தாலும் சிறுகதை வடிவமே இவருக்கு பெயரை தந்தது. மாயத்தன்மை கொண்ட மொழி சுழற்சியில் கனவும் நனவும் பிணையும் தன்மைகொண்ட எழுத்தை உருவாக்கினார். இதற்கு அவருடைய ஸ்பானிய மொழியும் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு அறிவும் உதவியாக இருந்திருக்கின்றன. சில கதைகள் குறியீட்டு தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

முக்கியமான கதைகளை பற்றி சொல்லி, இரண்டாம் பாகத்தை விரிவாக கொர்த்தஸாரின் படைப்பு பற்றிய பகுதியாக வாசு தந்திருக்கிறார்.

பதிவின் நீளம் கருதி ஒரே ஒரு கதை பற்றி மட்டும் இங்கே. ஒரு முதியவள் மரணப்படுக்கையில் இருக்கிறாள். அப்போது அவளது மகன் விபத்தில் சிக்கி இறக்கிறான். அதை முதியவளுக்கு சொல்லி அதிர்ச்சி தராமல் இருக்கும் பொருட்டு உடனிருப்பவர்கள், அவன் வேலையின் பொருட்டு பிரேசிலுக்கு சென்றிருப்பதாக சொல்கிறார்கள். வேறு ஒருவரை வைத்து அவன் கடிதம் எழுதி இருப்பதாக சொல்லி நம்ப வைக்கிறார்கள். போகப்போக அவர்களே அந்த பொய்யாய் நம்பும்படி நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது. இந்த பொய் விளையாட்டு ஒரு சமயத்தை அந்த முதியவளுக்கே தெரியும் என்பதை ஒரு இடத்தில் குறிப்பாக சொல்கிறார். ஒரு விதத்தை முதியவளும் இந்த விளையாட்டில் சேர்ந்து கொண்டு விடுகிறாள். ஒரு பொய்யை ஒருவரிடம் உண்மை என்று அறிமுகம் செய்யும்போது, அவரும் அது பொய் என்று தெரிந்தும் உண்மை போல பாசாங்கு செய்யும்போது, பொய் உண்மை என்பனவற்றின் இடமாற்றம் நடக்கிறது. இப்படி மரணம் வாழ்க்கை உண்மை பொய் என்ற சுழற்சியில் இந்த கதை செல்கிறது.

பாண்டிவிளையாட்டு என்ற நாவல் அத்தியாயங்களை இடையே தொடர்புகளை கலைத்துப்போட்டு எழுதப்பட்ட நாவல். மூன்று விதமாக அதில் நுழைந்து படிக்கலாம். இந்த நாவல் எப்படி அத்தியாயங்கள் வழியாக நுழைந்து வாசிக்கப்படலாம் என்பதை குறிப்பாக தந்திருக்கிறார். (படம் காண்க ).

மற்றொரு படைப்பில் ஒற்றைப்படை வரிகளை மட்டும் படித்தல் ஒரு கதையும் இரட்டைப்படை வரிகளை படித்தால் ஒரு கதையாக அமையும்படி எழுதி இருக்கிறார். இடப்பக்கம் வலப்பக்கம் என்று பிரித்து எழுதி இருக்கிறார். கதையில் புகைப்படத்தின் மூலம் மற்றொரு கதையை விரிக்கும் பாணியில் எழுதி இருக்கிறார். இவற்றை எல்லாம் அக்கதைகளை படித்து மட்டுமே நம்மால் உணர முடியும். படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

இறுதியாக இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த ஒரு அம்சம் பற்றி மட்டும் சொல்ல விழைகிறேன்.

கொர்த்தசாருக்கு மூன்று மனைவிகள். அதில் அவுரோரா என்பவர்தான் கொர்த்தசாருக்கு ஆன்ம நெருக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார். லிதுவேனிய பெண் கார்வாலிஸ் இன்னொருவர். டன்லப் மற்றொருவர். ஆனால் அவுரோரா அவருக்கு எப்போதும் நெருக்கமானவராகவே இருக்கிறார். இவர் அளவுக்கு இலக்கியமும் அரசியலும் ஆழமாக அறிந்தவர். இணைந்து பயணம், படைப்பு என்று நீண்ட வாழ்க்கை அவர்களுடையது. பின்னாளில் அரசியல் காரணமாக பிரிகிறார்கள். ஆனால் மூன்றாவது மனைவி இறந்தபின் ஒடுங்கி விரக்தியில் இருந்த கொர்த்தஸாரை உடனிருந்து கவனித்து தெம்பூட்டியவர் அவுரோராதான். கொர்த்தஸார் இறந்தபின் அஞ்சலி கட்டுரை எழுதிய லோசா, இதை எழுதுவது அவுரோரா எனும் பெண்ணுக்காகத்தான் என்று குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தம்.

இந்தியாவிற்கு வந்திருந்தபோது காசியில் பிணங்கள் எரிக்கப்படுவதை பார்த்த கொர்த்தஸார் அவுரோரா தம்பதி பயந்து போய தாம் இறந்தால் ஒருபோதும் எரிக்கப்படக்கூடாது என்று உரையாடலை பதிவு செய்கிறார்கள். பின்னாளில் கொர்த்தஸார் இறந்து போகிறார். ஆனால் தனது உடல் மூன்றாவது மனைவியின் உடல் அருகில் அடக்கம் செய்யவேண்டும் என்று உயில் எழுதி வைக்கிறார். இத்தனைக்கும் கொர்த்தசாருக்கு பலவிதத்தில் ஆதரவாகவும் அன்பாகவும் அறிவு பூர்வமாகவும் துணை நின்றவர் அவுரோராதான். ஆனால் முந்தைய மனைவியான அவுரோரா அவர் விருப்பப்படியே அப்படியே புதைக்கிறார். எவ்வளவு பெரிய மனம் வேண்டும் இதற்கெல்லாம் ! அதன் பிறகு அவருடைய எல்லா படைப்பையும் தொகுத்து வெளிக்கொண்டு வந்து கொர்த்தஸார் இன்று நாம் அறிவதற்கு பெரும் காரணமாக இருந்தவர் அவுரோராதான். அவர் இறந்த பிறகு கொர்த்தஸார் அருகில் புதைக்க இடம் இல்லை. ஆகவே கிறித்தவ மரபுக்கு மாறாக அவர் எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கொர்த்தஸார் அருகில் புதைக்கப்பட்டது !

காலம் எவ்வளவு விசித்திரமானது !

Sunday 19 April 2020

சற்றே நகுக-இரா முருகன் கட்டுரைகள்

'சற்றே நகுக
இரா முருகன் தினமணிக் கதிர் கட்டுரைகள்

தலைப்புக்கு முழு நியாயம் செய்யும் வகையில் படிக்கும்போது பெரும்பாலும்.புன்னகையை சிரிப்பை அல்லது உள்ளூர 'க்ளுக்' குகளை உண்டாக்கும் கட்டுரைகளே. அலுப்பூட்டும் மேடைத் துணுக்குகள் அல்லது பட்டிமன்ற அசட்டு ஜோக்குகள் போல் இல்லாமல் தனது நீண்ட விரிந்த பயண மற்றும் வாசிப்பு அனுபவத்தை ஒட்டி அமைந்தவை என்பதால் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

இன்று எதற்கெடுத்தாலும் சிடுமூஞ்சித் தனமும், அலுப்போட்டும் அற்ப விமர்சனங்களும், ம பி விவாதங்களும், அப்படி வெட்டிப் போற்றவற்றை கொலாஜ் போல ஒட்டி மறு உருவாக்கம் கொள்ளும் கீழ்மைகளும் மலிந்த சமயத்தில் ( சமூக ஊடகங்கள் புண்ணியத்தில்) - சற்று மனம் விட்டு புன்னகைக்க வைக்கின்றன இவை.

என்னுடைய ஆசிரியரும் எழுத்தாளருமான வே. சபாநாயகம் ஒரு முறை பேசும்போது நகைச்சுவை எழுதுவது மிகவும் கடினம். அது இயல்பாக வரவேண்டும். எழுதும்போது பரிச்சயமான ஒரு காட்சியை செய்தியை சொல்லி உறுத்தாமல் சிரிக்க வைக்க வேண்டும் என்று ஜராசுவின் "அப்புசாமி தண்ணீர் அதிகமாகிவிட்ட உப்புமா மாதிரி தளரத் தளர நடந்து வருவதைப் பார்த்ததுமே அவனுக்குத் 'திக்'கென்றது" என்பதை குறிப்பிடுவார். இரா முருகனுக்கு அவை கைவந்திருப்பதை இதில் சுவைக்கலாம்.

கட்டுரைத் தொகுப்பில்  மூன்று வகைகளை பார்க்கிறேன்.
தேவன் மற்றும் சுஜாதா உண்டாக்கும்படியான நகையுணர்வு. அதில் தமாஷ், நக்கல், கேலி, கிண்டல், பகடி என வகைகளை தொட்டிருக்கிறார்.

விஷய செறிவுள்ள சில கட்டுரைகள் (எங்கிருந்து இந்த மனுஷன் படிக்கிறான்/ பார்க்கிறான்  எனும் பொறாமையூட்டுபவை உட்பட )

ஒன்றோ இரண்டோ, இயல்பான நெகிழும் உணர்வைத் தரும் கட்டுரைகள்.

சிலவற்றை தருகிறேன். ஆனால் இதை கட்டுரையின் வாசிப்பு தொடர்ச்சியில் படித்தால் இன்னும் சுகம். (படியுங்களேன்)

இலக்கிய உலகில் தற்போது நிலவும் ஒவ்வாமை மிகுந்துவிட்ட நல்ல குணங்களை சொல்லும்போது -
//அருட்பா எழுதிய வள்ளலார் ராமலிங்க சுவாமிகளை எதிர்த்து யாழ்ப்பாண ஆறுமுக நாவலர் வழக்குத் தொடர்ந்து வள்ளலார் கோர்ட்டில் படி ஏற வேண்டிவந்தது. நாவலரைப் பற்றி ஏதும் பேசவோ எழுதவோ வேண்டாம் எனக் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையே, இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த பிட் நோட்டீஸ் யுத்தங்களின் மொழிநடையை இப்போது கைக்கொண்டால் அதற்கே ஏழெட்டு மானநஷ்ட வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிடுவார்கள்.//

டெல்லியில் பூங்காவில் நடைப்பயிற்சிக்கு   செல்லும்போது அப்போது நிலவிய அரசியல் பிரமுகர்களின் எளிமையை பார்க்கவைக்கும் -

// அந்தக்கால மத்திய அரசான ஜனதா சர்க்காரின் துணைப் பிரதமர் சவுதிரி சரண்சிங்க் தினசரி வாக்கிங்க் போக என்  பாதையில் வருகிற வழக்கம். அந்த வயசர் அரசியல் சதுரங்கத்தில் எந்தக் காயை எங்கே நகர்த்தலாம் என்று யோசித்தபடி மெல்ல நடக்கும்போது//

வழிப்பறி அதிகம் உள்ள லண்டன் பூங்காவை பற்றி சொல்லும்போது

//இரண்டு வருடம் முன்னால் லண்டன் கென்ஸிங்க்டன் பூங்காவில் ஓடக் கிளம்பியபோது, எதற்கும் அவ்வப்போது பின்னால் திரும்பிப் பார்த்தபடி ஓடிவிட்டு வா என்று நண்பர் எச்சரித்து அனுப்பினார். பூங்காக்களில்   வழிப்பறி நடக்கிற மாநகரம் ஆதலால் இப்படி ஒரு முன் ஜாக்கிரதை நடவடிக்கை. இதைப் பின்பற்றி நான் பத்து அடிக்கு ஒருமுறை நின்று அரைவட்டம் சுழன்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு டப்பிங் தெலுங்கு சினிமாவில் மந்திரவாதியின் உதவியாளன் போல் கேணத்தனமாக ஓட.. //

//உடுத்தியிருந்த எட்டு முழ வேட்டியைக் களைந்துவிட்டு ஜீன்ஸ¤க்கு மாறி, முரட்டு சாக்ஸையும் தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் ஷ¥வையும் காலில் மாட்டுவதற்குள் தொப்பலாக நனைந்தாகி விட்டது. வேட்டி கட்டியே போகலாம்தான். வேட்டி கட்டிக் கொண்டு ஓடினால், பர்ஸைப் பறிகொடுத்து விட்டுக் கையறு நிலையில் ஓடுகிறதுபோல் இருக்கும்..//

பழைய படங்களில் மிகவும் சீரியஸான ஒரு விஷயம் இப்போது காமெடியாக மாறிவிடுவதை -

// நாற்பதுகளில் வெளியான பிரபல தமிழ்ப்படம் ஒன்று. அப்போதெல்லாம் அரசர், சேனாதிபதி, மந்திரி, ராணி என்று யார் நாலுவரி வசனம் பேசினாலும், ஒரு குறிப்பிட்ட இனத்தின் பேச்சு மொழியைத்தான் பயன்படுத்துவது வழக்கம். இந்தப் படத்தில் ராஜா தான் வில்லனும் கூட. கதாநாயகி அரண்மனையிலிருந்து தப்பிக்கும்போது கொடுமைக்கார ராஜாவின் விசுவாசமான ஊழியர்கள் ஊதுகுழலை உரக்க ஊதுவார்கள். ஒரு நொடியில் படை வீரர்கள் திரண்டு வந்து கதாநாயகியைச் சுற்றி வளைப்பார்கள். மின்னல் வேகத்தில் இப்படிப் பிடிபட்ட கதாநாயகி மருட்சியோடு பார்க்க,  வில்லன் விளக்குவான் - “அவா ஊதினா இவா வருவா”.  அட்டகாசமாகச் சிரித்தபடி அடித்தொண்டையிலிருந்து உறுமிச் சொல்ல வேண்டிய சங்கதியை இப்படி சாத்வீகமாக வில்லன் மொழிந்ததை அந்தக் காலத்தில் ரசித்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்.//

சாதாரணமாக நாம் காணு விஷயங்களில் உள்ள நகைச்சுவையை

//அது என்னமோ தெரியவில்லை. சுவாரசியமான அறிவிப்புப் பலகைகள் என்னை விடாமல் துரத்துகின்றன. ஒரு மழைக்கால சாயந்திரத்தில் கையில் உயர்த்திப் பிடித்த குடையோடு புறநகர் கடைத்தெருவில் போய்க்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இது -"இவ்விடம் நாவிற்கினிய அரிசி, குருணை, தவிடு மற்றும் எள்ளுப் புண்ணாக்கு கிடைக்கும்.'...

இதெல்லாம் கிடக்கட்டும். அறிவிப்புப் பலகையில் கடைசி ஐட்டமான எள்ளுப் புண்ணாக்கு. எத்தனை யோசித்தும் அதில் மறைந்திருக்கும் இனிமை என்ன மாதிரியானது என்று புரியாமல் கடைக்காரரிடமே கேட்டுவிட்டேன். "அது ஒண்ணுமில்லே சார். கோழித் தீவனம், மாட்டுத் தீவனம்னு விளம்பரப்படுத்தி இன்னும் ரெண்டு போர்டை நிப்பாட்டி வைக்கலாம்னா அப்புறம் நான் கல்லா போட்டு உட்கார இடம் இருக்காது. அதான் எல்லாத்தையும் ஒரே போர்டாக்கிட்டேன்.//  என்பதை சொல்லும்போது உண்டாகும் புன்னகை அடுத்த வரியில் // என்று
ஒரே போடாக அவர் போட்டபோது அவருக்குப் பின்னால் தேவத்தூதனின் சிறகுகள் முளைத்திருக்கிறதோ என்று கொஞ்சம் எக்கிப் பார்த்தேன். இப்படி மனிதன், மாடு, கோழி என்று எல்லா உயிரினத்தையும் ஒரே தட்டில் அல்லது போர்டில் வைத்துப் பார்க்க்கும் பரிபக்குவம் //  என்கிறபோது புன்னகை அகலமாகிறது.

// கடையின் விளம்பரப் பலகையைத் திறந்து வைக்கச் சொன்னார்கள். ஆங்கிலத்தில் எழுதிய போர்ட் அது. "டோர் டெலிவரி. உங்கள் வீடு தேடி வந்து எல்லா மொழியிலும் பால், பத்திரிகை வினியோகிக்கப்படும். மொழிவாரியான பால்? எனக்கு உண்மையிலேயே குழப்பம். "பால்' என்பது "ஹால்' ஆகவும், "பல்' என்பது "ஹல்' ஆகவும் மாறும் கன்னட மொழி கம்பீரமாக வலம் வரும் புண்ணிய பூமியில் அரை லிட்டர் தமிழ்ப் பால் கேட்டால் வீடு தேடி வந்து "ஹல்'லை உடைத்துவிடுவார்களோ?// என்று சொல்லி //   இது என்ன எல்லா மொழியிலும் பால் ? என்று அவரிடமே கேட்க அவர் ஆரம்பத்தை பத்திரிகை ஏஜென்சி எடுத்து நடத்தத்தான் முதலில் எடுத்தேன். பாக்கெட் பால் வியாபாரமும் வச்சுக்க லாம்னு வீட்டுக்காரி ஒரே ஆடம் என்பதால் அவங்க விருப்பத்தையும் 'பால் ' னு அதில் சேர்த்திட்டேன் என்று சொன்னார் எனும்போது உங்களால் சிரிக்கலாம் இருக்க முடிகிறதா ?

தகவலைச் சொல்லும் ஒரு கட்டுரையில் //லத்தீன் மொழிப் பல்கலைக்கழகத்தின் தகவல் பக்கத்தில் இருந்தேன். அங்கே கிடைத்த தகவல் இது -"புராதன ரோம் நகரத்தில் துணிகளை பிளீச் செய்து தர நிறுவனங்கள் இருந்தன. பிளீச்சிங்குக்கு அமோனியா வேண்டுமே. அந்தக் காலத்தில் ஏது அமோனியா? அமோனியா நிறைந்த, அதாங்க "ஒன் பாத்ரூமைத்தான் இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, "இங்கே சிறுநீர் கழிக்கவும்' என்று அறிவுப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்.//

பேசச்சொல்லி அழைப்பதை // லத்தீன் மொழிப் பல்கலைக்கழகத்தின் தகவல் பக்கத்தில் இருந்தேன். அங்கே கிடைத்த தகவல் இது -"புராதன ரோம் நகரத்தில் துணிகளை பிளீச் செய்து தர நிறுவனங்கள் இருந்தன. பிளீச்சிங்குக்கு அமோனியா வேண்டுமே. அந்தக் காலத்தில் ஏது அமோனியா? அமோனியா நிறைந்த, அதாங்க "ஒன் பாத்ரூமைத்தான் இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, "இங்கே சிறுநீர் கழிக்கவும்' என்று அறிவுப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்.

பேசுவதற்காக அழைப்பதை // நாலு பலகையை இழுத்துப் போட்டு ஜமுக்காளம் விரித்து ஏழெட்டு நாற்காலியைப் பரத்தி, ஈசான்ய மூலையில் ஒரு மைக்கையும் பிரதிஷ்டை செய்கிறதை எங்கேயாவது பார்த்தால் நழுவி விடுகிற வழக்கம் எனக்கு. பேசக் கூப்பிட்டு மேடையேற்றிவிட்டால் என்ன செய்வது என்று ஒரு நடுக்கம்.//

சாதனைகள் என்ற பெயரிலான சேஷ்ட்டைகளை சொல்லும்போது

 // இவர்கள் போக, இன்னும் சில சாதனை வீரர்கள் என் பட்டியலில் உண்டு. மூக்கால் பட்டாணியை உருட்டிக் கொண்டு இருபத்தைந்து கிலோமீட்டர் போனவர் அவர்களில் ஒருவர். கட்டிலுக்குக் கீழே உருண்டு போன ஐந்து ரூபாய்க் காசை எடுக்கக் குனிந்து தேடினாலே மூச்சு வாங்குகிறது.  இருபத்தைந்து கிலோமீட்டர் உருட்டிப் போனால் அப்புறமும் அந்தப் பட்டாணி அதே சைஸில் இருக்குமா?//

கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு செல்லும் ஒருவர் விடாமல் கடிதம் எழுதுவதை

// உப்புப் பெறாத விஷயத்துக்காக வீட்டில் கோபித்துக் கொண்டு தேசாடனம் போன சொந்தக்காரர் ஒருவர் எழுதியது அதெல்லாம்.  ‘நான் சவுக்கியமில்லை. ஆலப்புழை கேளு நாயர் ஓட்டலில் காலை ஆகாரமாகப் புட்டும், சரியாக வேகாத கடலையும் சாப்பிட்டேன்’ என்று தடாரென்று பின்நவீனத்துவ இலக்கியம் மாதிரித் தொடங்கியவை பாதிக்கு மேல்.//

மின்னஞ்சல்கள் வந்த புதிதில் ஸ்பாம்கள் எனப்படும் தேவையற்ற குப்பைகள் மலிந்த (இது அநேகமாக பேஸ்புக்கின் மூதாதை என்று சொல்லலாம் ) நிலைமை பற்றி சொல்லும்போது

// கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும் வந்த பிற்பாடு  கார்டும், இண்லண்ட் லெட்டரும் வாங்கி வந்து கடிதம் எழுத உட்காருவதைவிட, கம்ப்யூட்டரைத் திறந்து நொடியில் ஈ மெயில் அனுப்புவதும் பெறுவதுமே சுலபமான வேலையாகப் போய்விட்டது.  இதிலும் சுவாரசியத்துக்குக்  குறைச்சல்  இல்லை.  நான் கேட்காமலேயே யார்யாரோ அமெரிக்காவிலிருந்து  மின்னஞ்சல் அனுப்பி, மிசிசிப்பியில் வீடுகட்ட எனக்கு சகாய வட்டியில் முப்பதாயிரம் டாலர் வழங்கியிருப்பதாக அறிவிக்கிறார்கள். மிசிசிப்பியில் வீட்டைக் கட்டிவிட்டு, சென்னையில்   உத்தியோகம் பார்க்கத் தினம் எப்படி வந்து போவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ‘வாங்கிப் போடுப்பா, நான் இல்லே இப்போ’ என்று//

நாம் இப்போது பெரும்பாலும் கிண்டல் செய்யும் மலையாள உச்சரிப்பை பற்றி

// ஒரு தடவை ஹைதராபாத் விமானத் தளத்தில் சென்னை விமானத்துக்காகப் பாதுகாப்பு சோதனை. சட்டைப் பையில் இருந்த மொபைல் தொலைபேசியை முன் ஜாக்கிரதையாக அணைத்து வைத்திருந்தேன். "ஓண் இட்", பாதுகாப்புச் சோதனை செய்த காவலர் சொன்னார். ‘உன்னோடது தானா’ என்று விசாரிக்கிறார் போல் இருக்கிறது. உரிமையை எப்படி நிரூபிப்பது? அதை வாங்கி ஒரு வருடம் ஆகி விட்டதே. பில் எல்லாம் எங்கேயோ. அவரிடம் இதைத் தயக்கத்தோடு சொல்ல, பலமாக மறுத்தபடி திரும்ப "ஓண் இட்". ‘என்னோடது தான். என்னோடது மட்டும் தான்’. துண்டைப் போட்டுத் தாண்ட யாரிடம் கடன் வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவரே வலுக்கட்டாயமாக மொ•பைலை வாங்கி, அதை இயக்கினார். திருப்தியோடு, “சரி போங்க” என்றார். சேட்டன் மலையாள உச்சரிப்பில் "on it" என்று சொல்லியிருக்கிறார், அவ்வளவுதான்.//

சுஜாதாவின் வாசனை கசியும் வரிகளாக

// கொஞ்சம் என்னோடு யார்க்ஷயருக்கு வாருங்கள். விக்டோரியா ஓட்டல் என்ற புராதனமான தங்கும் விடுதியில் குளியலறையை வெளியில் இருந்து பாருங்கள். உள்ளே போகலாம்தான்.  ஒடுங்கலான அந்த அறைக்குள் ஒரு தினுசாக உடம்பை உடும்பாக வளைத்துக் கொண்டு உள்ளே போக வேண்டும். அதே போஸில் ஷவரைத் திறக்க வேண்டும். ஒருக்களித்தபடியே குளித்துவிட்டு சுளுக்குப் பிடிப்பதற்கு முன் வெளியே வர வேண்டும். ரைட் ராயலாக உள்ளே நுழைந்தால் எசகு பிசகாகச் சுவர்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டு தீயணைப்புப் படையைக் கூப்பிட வேண்டியிருக்கும். அதுவும் அந்த ஊர்த் தீயணைப்புப் படையில் ஆறரை அடி உயரத்தில் கட்டு மஸ்தான பெண்மணிகள் அதிகம். நாலு சவரன் தங்கச் செயினை அழித்து ஒரு பவுன் மோதிரம் நாலு செய்கிறதுபோல், ஒரு தீயணைப்பு மாமியை அழித்தால் என் சைஸ் ஆசாமிகள் மூணு பேரைத் தோராயமாகச் செய்து நிறுத்தலாம். இந்த வீராங்கனைகள் இரண்டு பேர் வந்து பாத்ரூமிலிருந்து வெடுக்கென்று வெளியே பிடித்து இழுத்தால் இடது கை, வலது முழங்கால், தோள்பட்டை என்று தனித்தனியாக வந்து விழுந்து அப்புறம் உத்தேசமாக ஒட்டிச்சேர்க்க வேண்டியிருக்கும்.//

லண்டனில் ராணியின் அரண்மனைக்கு விருந்தினர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் அழைக்கப்படுவதை சொல்லும்போது

// இவர்கள் பொறுமையாகக் கியூவில் நின்று அரண்மனைத் தோட்டத்துக்குள் நுழைந்தால், நாலு பன், ரெண்டு கேக், உருளைக்கிழங்கு வறுவல், அப்புறம் நாயர் கடையில் அவசரத்தில் போட்ட டீ மாதிரி ஒரு திரவ பதார்த்தம். அம்புட்டுத்தான்.//

// ஒரு தடவை இந்தியாவிலிருந்து போன பிரபல அரசியல் தலைவருக்கு அப்பளம் பிடிக்கும் என்று கேள்விப்பட்டு, இங்கேயிருந்து அப்பளத்தை இறக்குமதி செய்தார்களாம். அப்பளக் கட்டில் ஒரு அப்பளத்துக்கும் இன்னொன்றுக்கும் நடுவில் மெல்லிசாக இலை நறுக்கை வைத்து அனுப்பியிருந்த பார்சலோடு, ‘எண்ணெயில் பொறிக்கவும்’ என்று ஒற்றை வரி செயல்முறை விளக்கம். ‘சும்மா ஜிகிடி வேலையாக’ ஒவ்வொரு இலை நறுக்குக்கும் மேலும் கீழும் வைத்துக் கட்டியிருந்த ‘வட்ட வட்ட மாவு வளையத்தை’ எல்லாம் எடுத்துப் போட்டுவிட்டு, நடுவிலிருந்த இலையை வெகு கவனமாக எடுத்துப் பொறித்ததாகக் கேள்வி!  இந்தக் தப்புக் கணக்கில் எத்தனை லட்சம்  எண்ணெயோடு போனது என்று தெரியவில்லை // என்று படிக்கும்போது வாஷிங்டனில் சாவி தெரிகிறார்.

தமிழ் ஊடகங்களையும் கேரளா ஊடகங்களையும் பிரித்து அடையாளம் காட்டும் சிரஞ்சீவி வரி -

// கோயம்புத்தூரில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ம் காங்கிரஸ் பற்றி பத்திரிகையின் முதல் பக்கம் முழுக்க  எழுதித் தள்ளியிருந்தார்கள். ‘பொலிட் பீரோவில் மூணில் ஒரு பாகம் மலையாளிகள்’. மாத்ருபூமிக்கு கம்யூனிஸ்ட்டுகளைப் பிடிக்காவிட்டாலும் மலையாளிகள் எங்கே முன்னுக்கு வந்தாலும் குஷியாகச் செய்தி கொடுக்கும். தமிழ்ப் பத்திரிகைகள் இந்த  மாநாடு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை//

தகவல் கொசுறாக // இந்து பத்திரிகையின் இணையத் தளத்தில், மணிரத்தினம் மகன் பதினாறு வயது நந்தன் மாநாட்டுப் பந்தலில் செஞ்சட்டை வாலண்டியராக செயல்பட்டதோடு அவர் எழுதிய மார்க்சிய ஆய்வுப் புத்தகமும் விற்பனையில் இருந்ததாகச் சொன்னது நினைவு வர, குட்டப்பனிடம் தகவல் பரிமாறினேன். //

மலையாள இலக்கிய கர்த்தாக்களிடம் நிலவிய ஆரோக்கியமான அப்பிராய பேதங்கள் பற்றி
// எம்.டி எந்தக் காலத்திலோ எழுதியது ‘வானப்ரஸ்தம்’ சிறுகதை. தன் காதலியும் பழைய மாணவியுமான பெண்ணை கொல்லூர் மூகாம்பிகை கோவில் தரிசனத்துக்குப் போகும் ஆசிரியர் சந்திப்பது பற்றியது. இந்தக் கதையில் டாக்சியில் பெட்ரோல் நிரப்புவது, கொல்லூர் பிரயாண மார்க்கம் பற்றிய தகவல், மூகாம்பிகை கோவில் அர்ச்சகர்களின் சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏகப்பட்டதைப் போட்டு எம்.டி ரொப்பி வச்சிருக்கார். எதுக்கு இதெல்லாம்? பத்மனாபன் எழுப்பும் கேள்வி இது.//

பள்ளிப் பாடப் புத்தகங்களில் நிலவும் தேவையற்ற அரசியல் பற்றி சொல்லும்போது

// பாடப் புத்தகத்திலே காந்தி பேரை நீக்கிட்டு கம்யூனிசத்தை நுழைச்சதாகவும், ஒரு மதத்தை உயர்த்திப் பிடிச்சு மற்றதை அம்போன்னு விட்டதாகவும் கேள்வி என்று பிடி கொடுக்காமல் சொன்னான் அவன். அது ஏன் ஏழாம் கிளாஸ் பாடத்தில் இப்படி? சரித்திரப் பாடத்தை அங்கே இங்கே கொஞ்சம் மாற்றி எழுதிப் படிக்க வைத்து வேடிக்கை பார்ப்பது பல மாநிலங்களிலும் வாடிக்கையாகிப் போன நிகழ்ச்சி. மார்க்சிய சாயத்தை இதற்கு வேணுமென்றே பூசியிருக்கிறார்கள் என்று குட்டப்பன் சொன்னபோது அவனுக்குள் பழைய காம்ரேட் ஒரு வினாடி தெரிந்தான் //.  இன்று ஒரிசாவில் பள்ளிப் புத்தகத்தில் உள்ள (தேவையற்ற ஒன்று )அரசியல் பற்றி சொல்பவர்கள் பலரின் முதுகு அழுக்கு இங்கே தெரிந்துவிடுகிறது.

ஜப்பானிய அதிகாரிகளை  உபசரிப்பது பற்றி - 

// ஜப்பானில் இருந்து ஒரே சீராக ஐந்து அடி உயரத்தில் ஓர் உயர்மட்டக் குழு வந்தது.  ஜப்பானியர்களைக் குனிந்து வணங்க வேண்டும். குனிந்தபடியே நம் விசிட்டிங்க் கார்டை அவர்கள் படிக்க வசதியாகத்  திருப்பி நீட்ட வேண்டும். அவர்கள் கார்ட் கொடுத்தால் கரிசனத்தோடு வாங்கி, பெயரை ஒருதடவை தப்பு இல்லாமல் உரக்கப் படிக்க வேண்டும். இதெல்லாம் ஜப்பானியக் கலாச்சாரத்தைப் போதிக்கும் கம்பெனிக் கட்டளைகள்.
முப்பது பேருக்கு முப்பது முறை இடுப்பை வளைத்துக் குனிந்து வணங்கி, விசிட்டிங்க் கார்ட் பரிமாற்றம் செய்து ஜாக்கிரதையாகப் பெயரை உச்சரித்து முடிப்பதற்குள் மதியச் சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது. அடிமைப்பெண் எம்.ஜி.ஆர் மாதிரி குனிந்தபடிக்கே அவர்களை லஞ்சுக்கு அழைத்துப் போனேன்.//

போகிற போக்கில் உபார்த்தோ ஈகோ பற்றி சொல்லி

 // ஏசு நாதர் ஒரு தடவை கூட சிரித்ததில்லை. அப்புறம் நாம் என்னத்துக்கு சிரிக்க வேணும் என்று வாதிடும் அந்த ஹோர்கா போல் எதிர்க் கட்சிகள் இடது முன்னணி செய்யும் நல்ல காரியம் எதையும் அங்கீகரிப்பதில்லை// ஒரு செய்தியை உதிர்க்கிறார்.

கோவிந்த் நிஹலானி கட்டுரை மிக செறிவானது. எவ்வளவு விஷயங்கள்.  
தமாஷாக ஆரம்பித்து // கோவிந்த், நான் உங்க கட்டிட வாசல்லே தான் நிக்கறேன். கறுப்புச் சட்டை. நான் முதல் மாடி ஜன்னல் பக்கம் நிக்கறேன். தலையைத் தூக்கிப் பாருங்க இரா.இராவாகிய நான் முதல் மாடியைக் கவனித்துப் பார்க்க, துணி உலர்த்திக் கொண்டிருந்த குஜராத்திக் கிழவியம்மா முந்தானையை அவசரமாக சரிசெய்து கொள்கிறாள். காலம் கெட்டுக் கிடக்கு. வயசானாலும் பாதுகாப்பு இல்லாத பட்டிணம் இது.// என்று கிளம்பி நிறைய சொல்கிறது.

பிரம்மாண்டமான தயாரிப்பான ஆட்டன்பரோவின் காந்தி ஆங்கிலப் படத்துக்கு செகண்ட் யூனிட் டைரக்டராகப் பணியாற்றி, ஷ்யாம் பெனகலின் வலதுகை அவர் -  கொலாட்கர் பற்றிய கௌரியின் ‘கருப்புக் குதிரை’ நாடகம் பற்றிப் பேச்சு கடந்து போகிறது. - கொலாட்கரின் ஜெஜூரி, காலாகோடா கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து - எல்குஞ்ச்வரோட பாபுலர் டிராமா வாதே சிராபந்தியை நீங்க ஏன் திரைப்படமாக்கலே? -லோர்காவின் நாடகமான ஹவுஸ் ஓஃப் பெர்னார்டா ஆல்பாவை, ருக்மாவதி கி ஹவேலி என்று இந்திப் படமாகச் செய்த அனுபவம் பற்றி - புரசீனியம் தியேட்டரை காமிராவில் அடைச்சா கொஞ்சம் இரட்டைப் பரிமாணம் தட்டுப் படாதா - பீஷ்ம சஹானியின் இந்தி நாவலான தமஸ் கோவிந்த் நிஹலானி கைவண்ணத்தில் தூர்தர்ஷன் சீரியலாக வந்தபோது // என்றெல்லாம் ஏகப்பட்டதை சொல்கிறார்.

வெளிநாடு ஒன்றில் இலக்கிய கூட்டம் ஒன்றைப் பார்க்க சென்றபோது அறிமுகம் செய்திகொண்டு பேசும்போது அங்கே நன்றாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை சொல்லி

//ஆனால், நம்ம ஊர் வழக்கம் வேறு. எழுத்தை தொழிலாக வைத்துக் கொள்ளாமல், வேலை பார்த்துக் கொண்டே வாரக் கடைசியில், ராத்திரி கண் முழித்து பெண்டாட்டி படுத்துக் கொள்ளச் சொல்லி படுக்கையில் இடம் விட்டு நகர்ந்தாலும் பொருட்படுத்தாமல் டெட்லைன் காப்பாற்ற எழுதி அனுப்பி சன்மானம் வாங்குகிறது அது.  வீட்டுக்காரருக்கு இந்த வளமுறையை கோடி காண்பிப்பதில் அடுத்த ஐந்து நிமிடம் கடந்து போனது. போகட்டும். தமிழ் எழுத்து பற்றி அவரும் அறியட்டும்.//

இறுதியாக ஒன்றை சொல்லி முடித்து விடுகிறேன் . மறதி பற்றி ஒரு கட்டுரையில் உடலும் மனமும் நைந்து போய் தான் என்ன செய்கிறோம் என்பதை பற்றிய பிரஞை இல்லாமல் இருப்பவர்கள் (இந்த ஜானரில் ந்யூறான் கொலைகள் என்று ஒரு சிறுகதையை  ரமேஷ் கல்யாண் என்பவர் எழுதி இருக்கிறார் - (அதென்னமோ நான் என்று சொல்லிக்கொள்ள கூச்சம் ))

// இவரும் அப்படித்தான் எப்போதோ இறந்து போன யார் யாரோ பக்கத்தில் இருப்பதாக நினைத்து அவர்களோடு பேச முயற்சி செய்தபடி குளியல் அறைக்குள் போனது ஒரு நடுப்பகலில். இல்லாத யாரையோ குளிக்கச் சொல்லி அவர் திறந்தது வென்னீர் ஊற்றாக பீறிடும் ஷவரை. அதன் கீழே நின்றபடிக்கு நிறுத்த முயன்று தோற்றுப்போனவர் மேல் கொதிக்கக் கொதிக்க சுடுநீர் விழுந்து கொண்டிருந்தது கிட்டத்தட்ட மாலை மயங்கும் நேரம் வரை. தேடி வந்த யாரோ குளியல் அறையில் பார்த்தபோது முக்காலே மூணு பாகம் வெந்து போயிருந்தார். வலியும் வாதனையுமான இருப்பும் இறப்பும் அவருக்கு என்று எழுதி வைத்திருந்தது// .

இப்படி அல்ஷிமர், பார்க்கின்ஸன் மறதி நோய் உள்ள மோகன்லால் நடித்த  சினிமா பற்றி சொல்லும்போது (அருமையான படம். மிஸ் பண்ணாமல் பாருங்கள். மழையில் நனைந்தபடி நீளும் மோகன்லாலின் கை, உண்ணியப்பம் உண்ணியப்பம் என்ற அவர் குரல் ..இதோ இப்போதும் எனக்கு கேட்கிறது )

// தன்வந்தரம் (*) படத்தில் மோகன்லால் இணைவிழைந்து மனைவியோடு படுக்கையில் இருக்கும்போது பாதியில் எல்லாம் மறந்து போய், வெளியில் நடக்கிற ஒரு அற்புதமான காட்சியைப் படமாக்கி, ரசிகர்கள் கோபத்துக்குப் பயந்து சினிமாவில் சேர்க்கவில்லை.// என்ற செய்தியை சொல்லி விட்டு கீழ்க்கண்டவாறு முடியும் வரிகளை படித்தபோது மனம் கனம் கொண்டது.

// இதை நினைவு கூர்ந்தபடி படம் பார்த்துப் படுக்கையில் விழுந்தபோது நாகேஷ் உயிரோடு இருந்தார். காலை விடிந்ததும் அவரும் காலமானார் பட்டியலில் சேர்ந்து விட்டார். எப்போது இறந்தார் என்று அவரை நெருக்கமாக அறிந்த நண்பரைக் கேட்டேன். கன்னடத் திரைப்படம் எதையோ டிவிடியில் பார்த்தபடி உயிர் போனதாகச் சொன்னார். அல்ஷிமர், பார்க்கின்ஸன் மூலம் மரணம் போல் இருந்திருக்காது அது. //

கட்டுரையில் இரண்டு கவனித்தேன்.

அரண்மனை விருந்து கட்டுரையில் 'தலநகர்' என்று இருக்கிறது. தலை நகர் எழுத்து பிழையா அல்லது 'ஸ்தல நகர் ' என்ற பொருளிலா ?

மோகன்லால் படம் தன்வந்திரம் (*) என்று இருக்கிறது. அது தன்மாத்திரா அல்லவா ? (வெகு சில மலையாள படங்களே பார்த்தவன் நான். (இரா) முருகனுக்கே தினைமாவா என்று கேட்காதீர் ? சந்தேகம். கேட்டுவிட்டேன்.'

சற்றே நகுக

மோகன்லால் படம் தன்வந்திரம் (*) என்று இருக்கிறது. அது தன்மாத்திரா அல்லவா ? (வெகு சில மலையாள படங்களே பார்த்தவன் நான். (இரா) முருகனுக்கே தினைமாவா என்று கேட்காதீர் ? சந்தேகம். கேட்டுவிட்டேன்.

இயற்பியலின் தாவோ - பிரிட்ஜாஃப் காப்ரா

இயற்பியலின் தாவோ பிரிஜாப் காப்ரா Fritjof Capra மொ பெ போன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம் #இயற்பியலின்_தாவோ படிக்கத்  துவங்கி இர...