ஊதல் இசைபட வாழ்தல் (கன்னிவாடி தொகுப்பு )
க சீ சிவக்குமார்
டிஸ்கவரி புக் பேலஸ் . கேகே நகர். சென்னை
discoverybookpalace@gmail.com
8754507070
கன்னிவாடி தொகுப்பில் ஊதல் இசைபட வாழ்தல் என்ற க சீ சிவக்குமாரின் அருமையான சிறுகதை. இப்படி ஒரு கதைக்களனும், வலியை புன்னகைத்துக்கொண்டே சகித்து தாண்டிப்போகிற மொழியும் வேறு கதைகளில் படித்ததில்லை. கொஞ்சம் சுஜாதாவும் கொஞ்சம் நாஞ்சில்நாடனையும் நினைவுபடுத்தும் மொழிநடை. ஆனால் தனக்கே உரித்தான கதைசொல்லல் முறை. தலைப்பிலேயே கொஞ்சம் எள்ளல் இருப்பதை கவனிக்கலாம். கதையில் வரும் வரிகள் அடைப்புக்குறிகளுக்குள்.
சிறிய ஊர்களில் நெரிசல் மிகுந்த பேருந்துகள் அதிகம். அதில் நடத்துனரும் உதவியாளராக ஒருவர் இருப்பார். AC எனும் அசிஸ்டன்ட் கண்டக்டர் (அந்த நிலை ஒன்றும் குளிர்ச்சியானதல்ல என்று ஒரு வரி) தனது கதையை சொல்வது. தனது விசிலுக்கு துந்துபி என்று பெயர் வைக்கிறார். ரெபரீ, கண்டக்டர், கூர்க்கா மற்றும் மனநிலை சரியில்லாதவர்கள் இவர்கள்தான் ஊதலை ஊத முடியும் என்று நகைச்சுவையாக ஆரம்பித்து தனது கண்டக்டர் வேலை கனவு, உதவியாளன் வேலை, பஸ்ஸில் வரும் இளம் பெண்கள் முன் தனது புத்திசாலி தனத்தை காட்டிக்கொள்வது (ஹோல்டன் என்று சொல்லாம ஹோல்டு ஆன் என்பது ) என்று வேலை செய்கிறான். கையில் டிக்கட் கொத்து பணப்பை இல்லல்லாத கண்டக்டர். இளமை வேகத்தில் சிரிக்க சிரிக்க பேசுவதும், சிவிக் என்று விசில் ஊதி நிறுத்துவதுமாக (புதிதாக வேலைக்கு வந்தவர்கள் ஊதுவது தொப்புளில் எழும் காற்று ஊதல் வழியாக உயிரே போவது போல ) காலம் கழிகிறது. ஆனால் நிறைந்த கண்டக்டர் வேலை கிடைக்காமல் இருக்கிறது. பேருந்துக்குள் சுத்த தமிழில் பேசி கலகலப்பாக இருப்பது (சுமையை துரிதமாக இறக்குங்கள்) அவன் பாணி. ஒருநாள் முதலாளி மேனேஜரிடம் சொல்கிறார் - அந்த டிரைவரை கொஞ்சமாவது சிரிக்க சொல்லுங்க இல்லாவிட்டால் யாரும் வண்டியில் ஏற்கமாட்டார்கள். இந்த பையனை சிரிக்காமல் இருக்க சொல்லுங்க அப்பறம் யாரும் டிக்கட் வாங்க மாட்டார்கள் . அவ்வளவு குதூகலமான இளம்பருவம். அப்பா சொன்னார் என்று அலைந்து திரிகிறான். (இதை எழுதும்போது 29 வருடம் 11 மாதம் 3 3/4 நாழி ஆகிவிட்டது. இனி கலெக்டர் ஆவது மூலிகை பெட்ரோல் தயாரிப்பது தான் பாக்கி ). ஒரு நேர்முக தேர்வுக்கு சென்று சி எல் கண்டக்டர் வேலை கிடைக்கிறது. அதாவது தினக்கூலி (இந்த வேலையை அத்தக்கூலி என்று சொல்வதன் மூலம் தமிழுக்கு ஒரு புதிய சொல்லாட்சியை வழங்குகிறேன் ). 240 ட்யூட்டிகளுக்கு பிறகு வேலை நிரந்தரம் ஆகும் என்ற கனவில் வேலை செய்கிறான்.(காக்கி மற்றும் கலர் கனவுகளில் சஞ்சரித்தேன். தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு என சிட்டுக்குருவி சிறகடித்தது) ஆனால் ஒரு நாள் வேலை இல்லை என்று நிறுத்திவிட்டனர் (ஒரு பிளாக் மூன் நைட்டில் போயிட்டு வாங்க தம்பிகளா என்று அனுப்பிவிட்டனர் ). இப்போது பேருந்து டிப்போ அலுவலகத்தில் உள்ள தனது லைசென்ஸை வாங்கி வரவேண்டும் என்று செல்கிறான். உடன் பணிசெய்த அத்தக்கூலி முருகேசன் நீதிமன்pறத்தில் கேஸ் போட்டு வேலை வாங்கலாம் என்று ஆசை காட்டுகிறான். இவன் டிப்போவுக்கு போகும்போது கேஷ் பேக்கை குடுத்துட்டு லைசென்ஸை வாங்கிட்டு போ என்கிறார்கள். அப்போதுதான் நினைவுக்கு வருகிறது அதை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது. வீட்டுக்கு தொலைபேசியில் மிக சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் பேசி கேஷ் பேக்கை ஒரு பேருந்தில் அனுப்ப சொல்கிறான். காத்திருப்புக்கு பின் நிர்மலா பஸ்ஸில் ஒரு பை வருகிறது. சிதம்பண்ணன் கொண்டு வருகிறார் .
இங்கு கதையை இதுவரை இருந்த விளையாட்டுத்தனத்திலிருந்து இயல்பாக ஆனால் நுட்பமாக வேறு தடத்துக்கு மாற்றுகிறார் க சீ. பையில் பணப்பை, காக்கி யூனிபார்ம், மாற்று உடை, கைலி டூத் பேஸ்ட் என்று ஒரு வாரத்துக்கான விஷயங்கள் இருக்கின்றன. வேலை கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையில் இதை அனுப்பிய அப்பாவி ஜனங்களை நினைத்து கண்களில் நீர் கோர்த்டுத்துக்கொண்டது. டிப்போவில் பையை கொடுக்கும்போது விசில் தட்டுப்படுகிறது. இது நிர்வாகத்து விசில் அல்ல. அவனுடையது. அதை (துந்துபியை) பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு திரும்புகிறான். தங்கை மக்கள் மாமா என்று வந்து கட்டிக்கொள்கிறாள். வழக்கம் போல பாக்கெட்டை தேடி ஊதலை எடுத்து ஊதுகிறாள். (என் சோகங்கள் அவளுக்கு புரியாது. புரியவும் வேண்டாம். பிராஞ் மேனேஜர் மேனேஜிங் டைரக்டர் இவர்களுக்கு புரியாத சோகம் இவளுக்கு புரிந்து ஆகப்போவதென்ன ).
இப்படி முடிகிறது சிறுகதை (அவரது வரிகளிலேயே )
குழந்தை துந்துபியை முழக்கினாள். கன்னங்களில் சந்தோஷம் இடறுகிறது. அந்த சிறிய அஃறினைப் பொருள் என்ன அழகாக உயிர்ப்பாக தன்னைத் தக்கவைத்துக் கொண்டுவிட்டது குழந்தையின் கன்னத்தை தட்டினேன்.
'சொல்லுடி ..கிருத்திக்குட்டி !போலாம் ..ரைட்ஸ் !
-------
இப்படி ஒரு கதை படித்துவிட்டு அவரை நேரில் பாராட்டினால் எழும் அவருடைய சப்தமற்ற மென்சிரிப்பை பார்க்கும் வாய்ப்பு எப்போதும் இல்லை என்று நினைக்கும்போது இந்த தொகுப்பின் மீது ஒரு பரிவும் அன்பும் கூடுவதை தவிர்க்க இயலவில்லை

No comments:
Post a Comment